Tamil Nadu Latst News: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சட்ட வழக்கு பதிவதற்கான ஒப்புதலை ஆளுநர் வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசாங்கமானது உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முறைகேடு தொடர்பான விவகார வழக்கில் ஏற்கனவே அவர் மீதான நடவடிக்கை எடுப்பது குறித்து தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ள நிலையில், அதன் மீதான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படாமால் இருப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த முறை விசாரணையின் போது எழுப்பி இருந்தார்கள்.
அதுமட்டுமிலாமல் இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது தொடர்பாக பதிலளிக்குவதற்கான அறிவுறுத்தலையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கிருந்தனர்.
இந்த நிலையில் தற்பொழுது தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கு சட்ட அனுமதி கிடைத்துள்ளது எனவும், அதன் அடிப்படையில் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள புகார்கள் மீதான குற்றப்பத்திரிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ்நாடு காவல்துறை தாக்கல் செய்யும் என பிரமாண பத்திரத்தில் எழுத்து பூர்வமாக தமிழ்நாடு அரசாங்கம் தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணை கீழமை நீதிமன்றத்தில் எம்பி எம்எல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசாங்கம் சார்பாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, முறைகேடு செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதாவது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அப்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அது பேசுப்பொருளாக மாறியது. அதன்பிறகு 2022 ஜனவரி 5 ஆம் தேதி ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.
மேலும் படிக்க - முடிந்தால் எடப்பாடி பழனிசாமி, வேலுமணியை கைது செய்து காட்டுங்கள்: சசி ஆதரவாளர் ஆவேசம்
மேலும் படிக்க - தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது
மேலும் படிக்க - கே.பி முனுசாமி பணம் கேட்டது உண்மை தான் - டைம் பார்த்து அடித்த ராஜேந்திர பாலாஜி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ