)
Tirupur Rithanya Dowry Death Bail : கடந்த ஜூன் மாதம் நடந்த ரிதன்யாவின் மரண வழக்கு, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணையில் தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்!
கடந்த ஜூன் மாதம் நடந்த ரிதன்யாவின் தற்கொலை, தமிழகத்தையே உலுக்கிய ஒரு நிகழ்வாகும். திருப்பூரை சேர்ந்த 27 வயது பெண் ரிதன்யா, ஏப்ரல் மாதத்தில் கவின் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணமானது பெரும் பொருட்செலவில், பல நூறு சவரன் நகை கொடுக்கப்பட்டு நடத்தி வைக்கப்பட்டது. ஆனால், திருமணமான 74 நாட்களில், ரிதன்யா தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
ரிதன்யா, உயிரிழக்கும் முன்பு தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் நோட்ஸ்களை அனுப்பி விட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். தன்னால் கணவர் மற்றும அவரது வீட்டாரின் கொடுமைகளை தாங்க முடியவில்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ராதேவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ரிதன்யா மரண வழக்கு விசாரணையின் முக்கிய தீர்ப்பு இன்று வந்துள்ளது. இந்த விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட கணவர் கவின்குமார் மற்றும் ரிதன்யாவின் மாமனார் மாமியாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. இவர்கள் மூவரும் காலை, மாலை போலீஸில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் விதித்து உத்தரவிட்டிருக்கிறது.
ரிதன்யாவின் தந்தை வைத்த கோரிக்கை:
ரிதன்யாவின் தந்தை, தன் மகளின் மரண வழக்கை பாலியல் துன்புறுத்தல் பிரிவிலும் சேர்க்க வேண்டும் என்று கோரி, கோவை மேற்கு மண்டல ஐஜியிடம் புகார் கொடுத்திருந்தார். அதே போல, ரிதன்யாவின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு, ஆரம்பத்தில் இருந்தே ”வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழப்பு” என்கிற வகையிலேயே பார்க்கப்பட்டது. ஆனால், ரிதன்யா தனது கடைசி வாய்ஸ் நோட்டில் தன் கணவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். அதே போல, உயிரிழக்கும் முன்பு தன் தாயாரிடம் பேசுகையில், தன்னை கணவர் தனியாக விடுவதே இல்லை என்றும், கழிவறையில் கூட உள்ளே வந்து நின்று கொள்வதாகவும் கூறியிருந்தார். கவின்குமார், இப்படி சைக்கோத்தனமாக நடந்து கொண்டது குறித்து மீடியாக்கள் பேசினாலும், நீதி ரீதியாக இது வரதட்சணைக்காக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகவே பார்க்கப்பட்டது. இதுவே, இப்போது குற்றம் சுமத்தப்பட்ட மூவருக்கும் ஜாமீன் கிடைத்திருப்பதற்கு வழிவகை செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ