)
Tirupur Rithanya Dowry Death : சமீபத்தில், தமிழக்தை உலுக்கிய மரணங்களுள் ஒன்று, திருப்பூர் ரிதன்யாவின் மரணம். 27 வயதான பெண் ரிதன்யா, திருமணமான 74 நாட்களில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் குறித்தும், அவர் வழக்கில் இப்போது என்ன நிகழ்ந்து வருகிறது என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
3 ஆண்டுகளுக்கு முன்பே..
சமீபத்தில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில், கவின்குமார் குடும்பத்தார் தரப்பில் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜரானார். அப்போது, தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று ரிதன்யா கூறியதாகவும், இரு தரப்பும் பொருளாதாரத்தில் சம அளவில் இருப்பதால் கவின் வீட்டில் வரதட்சணை தேவையில்லை என்று கூறியதாகவும் குறிப்பிட்டார். மேலும், அதிர்ச்சிகரமாக 3 ஆண்டுகளுக்கு முன்பே ரிதன்யா தற்கொலைக்கு முயன்றதாக கூறினார்.
வழக்கு விசாரணை:
பிரேத பரிசோதனை அறிக்கையில், ரிதன்யா உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குறிப்பிடவில்லையே என்று உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இதையடுத்து, ரிதன்யாவின் உடற்கூறாய்வு குறித்த விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும், இந்த விசாரணையை வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிதன்யாவின் தந்தை கொடுத்த புதிய மனு:
ரிதன்யாவின் தற்கொலை வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், அவருடைய தந்தை அண்ணாதுரை சமீபத்தில் தமிழக அரசிடம் கொடுத்த கோரிக்கை மனு, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவர், தனது மகளுக்கு அவரது கணவரால் ஏற்பட்ட அனைத்து கொடுமைகளையும் குறிப்பிட்டுள்ளார்.
மகள் ரிதன்யாவிற்கு ஏப்ரல் 11ஆம் தேதி 300 சவரன் நகை, 62 லட்சம் மதிப்பிளான காரை வாங்கி கொடுத்து திருமணம் செய்து வைத்ததாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். மகளின் வருங்காலம் மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்காக இதனை செய்ததாக தெரிவித்த அவர், புகுந்த வீட்டிற்கு சென்ற போது, 100 பவுன் நகையினை மட்டும் எடுத்து சென்றுவிட்டு, 200 பவுனை தங்களிடமே கொடுத்து சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மீதி இருக்கும் நகைகளை எடுத்து வருமாறும், மேலும் வரதட்சணை கேட்டும் கவின் குடும்பத்தினர் ரிதன்யாவை துன்புறுத்தியதாக தன் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 25ஆம் தேதியன்று, ரிதன்யா தங்களின் வீட்டிற்கு வாடிய நிலையில் வந்ததாகவும், என்ன நடந்தது என்று கேட்ட போது தங்களிடம் ரிதன்யா ஒன்றுமே கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கவின் செய்த கொடுமைகள்:
கவின், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மாமியார் சித்ராதேவி ஆகியோர் அடுத்த நாளே தங்கள் வீட்டிற்கு வந்ததாக குறிப்பிட்டுள்ள அவர் ”உங்களிடம் ஏதாவது கூறினாளா?” என்று கேட்டதாகவும், மாமியார் ரிதன்யாவை தனியாக அழைத்து சென்று பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். செல்லும் போது மீண்டும் வீட்டுக்கு வருமாறு கூறியதாக அவர் சொன்னதாக குறிப்பிட்டிருக்கிறார்.
ரிதன்யா தன் தாயிடம் அனைத்து உண்மைகளையும் அழுது கூறியதாக அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார். கவின் அடிக்கடி தன்னை பாலியல் ரீதியாக துன்புருத்துவதாகவும், விருப்பத்துக்கு மாறாக, இயற்கைக்கு புறம்பான முறைகளில் தரக்குறைவான பாலியல் ரீதியான செயல்களில் அவர் ஈடுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு உடல், மன வலி ஏற்பட்டு துன்பப்பட்டதாகவும், ஒவ்வொரு நாள் இரவிலும் அவருடன் பயத்துடன் கழித்துள்ளதாக கூறியிருக்கிறார்.
குளியல் அறையில் கூட தனக்கு தனிமை கிடைக்கவில்லை என்று கூறியிருக்கும் ரிதன்யா, கவினின் துன்புருத்தலால் தன்னால் பல வாரங்கள் சரியாக நடக்க கூட முடியவில்லை என்று கூறியிருக்கிறார். இதைத்தாண்டி, ரிதன்யாவின் மாமனார் அவரை இரவு 11 மணிக்கு மேல் தனியாக அழைத்து சென்று மோசமாக பேசியதாகவும், மகன் விரும்பும்படி நடந்து கொள்ள வேண்டும் என்று 4 மணி நேரம் தகாத வார்த்தைகளால் அட்வைஸ் செய்ததாகவும் கூறியிருக்கிறார்.
ரிதன்யாவிற்கு நேர்ந்த கொடுமைகள்:
திருப்பூரை சேர்ந்த ரிதன்யாவிற்கும், கவின்குமார் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி அன்று திருமணம் நடந்தது. மிக பிரம்மாண்டமான அளவில் நடைப்பெற்ற இந்த திருமணத்திற்கு பிறகு, ரிதன்யா தனது கணவரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரது மாமனார் மாமியாரும் “நீ வீட்டில் இருந்து போட்டுக்கொண்டு வந்த நகை எல்லாம் உண்மையா?” அதை உரசிப்பார்த்து டார்ச்சர் செய்ததாகவும் ரிதன்யாவின் தந்தை பின்னாளில் குறிப்பிட்டார்.
ஒரு பக்கம் கணவரின் டார்ச்சர், இன்னொரு பக்கம் மாமனார் மாமியாரின் டார்ச்சரால் தவித்து வந்த ரிதன்யா, தனது தாய் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். இதையடுத்து, மீண்டும் வந்து வாழுமாறு, கவின் வீட்டார் வந்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ரிதன்யா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.
ரிதன்யாவின் மரணம்!
கடந்த ஜூன் 28ஆம் தேதியன்று கோயிலுக்கு செல்வதாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார் ரிதன்யா. அங்கே, சாலை ஓரத்திலேயே காரை நிறுத்திவிட்டு மரங்களுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இறப்பதற்கு முன்னர், அவர் தனது தந்தைக்கு 7 வாய்ஸ் நாேட்களை அனுப்பி வைத்துவிட்டு இறந்திருக்கிறார்.
அந்த வாய்ஸ் மெசஜ்களில் ரிதன்யா, தான் தனது கணவர் மற்றும் மாமனார் மாமியாரால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தனது கணவர் தன்னை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாகவும், தனக்கு இந்த உலகில் வாழவே பிடிக்கவில்லை என்றும் கூறி தான் போவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம், தமிழ்நாட்டு மக்களை கதிகலங்க வைத்தது.
ரிதன்யாவின் மரணத்தை அடுத்து, அவரது கணவர் கவின்குமார், மாமானர் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் சித்ராதேவி, உடல்நிலை சரியில்லாததால் விடுவிக்கப்பட்டு, ரிதன்யா குடும்பத்தினரின் கடும் போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் கைது செய்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ