11 & 12ஆம் வகுப்பு பாெதுத்தேர்வு: மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு! விதிமுறைகள் என்னென்ன?

TN Public Exam 2025 Rules And Regulations : தமிழ்நாடு முழுவதும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தாெடங்குகிறது. இதில், மாணவ மாணவிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Mar 3, 2025, 08:47 AM IST
  • 11 & 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
  • மொத்தம் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்..
  • பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன?
11 & 12ஆம் வகுப்பு பாெதுத்தேர்வு: மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு! விதிமுறைகள் என்னென்ன?

TN Public Exam 2025 Rules And Regulations : மார்ச் 3ஆம் தேதியான இன்று, தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாணவர்களும் தேர்வு அறை கண்காணிப்பாளர்களும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பள்ளி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனுடன் சேர்த்து, மாணவர்கள் தேர்வு அறைக்கள் எதையெல்லாம் எடுத்து செல்லாம், எதை எடுத்து செல்லக்கூடாது என்பது குறித்த விவரத்தை இங்கு முழுமையாக பார்க்கலாம்.

Add Zee News as a Preferred Source

மாணவர்கள் எடுத்து செல்ல வேண்டியவை:

>ஹால் டிக்கெட்: மாணவர்கள் மற்றும் அவர்கள் எழுதும் தேர்வின் விவரம் அடங்கிய ஹால் டிக்கெட்டை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும். அதில், மாணவர்கள் கிறுக்கியோ, வரைந்தோ, எழுதியோ வைத்திருக்க கூடாது.

>அடையாள அட்டை: ஒரு சில தேர்வு எழுதுபவர்களுக்கு அவர்களின் அடையாள அட்டை காண்பிக்க வேண்டிய சூழல் வரலாம். எனவே, கூடவே ஒரு அடையாள அட்டையை எடுத்து செல்வது நன்று.

>எழுத தேவையானவை: நன்றாக எழுதும் பேனா, பென்சில், ரப்பர், ஷார்ப்னர், ஸ்கேல் உள்ளிட்டவற்றை எடுத்து செல்லலாம்.

>கால்குலேட்டர்: உங்களுக்கு எந்த தேர்வோ அதை பொறுத்து கால்குலேட்டர் அனுமதிக்கப்படும்.

>தண்ணீர் பாட்டில்: Transparent தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்லலாம்.

மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:

>தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடம் முன்னரே தேர்வு மையத்திற்குள் சென்று விடுவது நன்று.

>சாதாரண கைகடிகாரத்தை மட்டுமே தேர்வர்கள் கட்டியிருக்க வேண்டும். 

>பென்சில் பாக்ஸ், பவுச் அகியவற்றிற்கு அனுமதி இல்லை. உள்ளிருப்பது வெளியில் தெரியும் டிரான்ஸ்பரண்ட் பவுச்சை எடுத்து செல்லலாம்.

>தங்கள் கைகளில், கால்களில், உடலின் எந்த பகுதியிலும் எழுதியிருக்க கூடாது.

>மாணவர்கள் தேர்வு துவங்கும் முன் தேர்வெழுதும் முதன்மை விடைத்தாளின் பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும்.

>முகப்பு சீட்டில் இருக்கும் பெயர், புகைப்படம், பாடம், பயிற்றுமொழி, தேதி, எந்த தேர்வு உள்ளிட்ட விவரங்கள் சரியா என்பதை பார்க்க வேண்டும்.

>தேர்வாளர்கள், தங்களின் மேசை நாற்காலி, பாக்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களில் எந்த துண்டு சீட்டும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

>விடைத்தாளின் எந்த பகுதியிலும் மாணவர்கள் எழுத கூடாது.

>தேர்வாளர்கள் எதை எழுதினாலும் அதை விடாத்தாளில் மட்டுமே எழுத வேண்டும்.

>கூடுதல் விடைத்தாள் வேண்டுமென்றால் தேர்வு கண்காணிப்பாளரிடன் கடைசி 2 பக்கம் இருக்கும் போது கூறிவிட வேண்டும்.

>விடைத்தாளின் சில பக்கங்களை அடிக்க நேர்ந்தால், அது தன்னால்தான் அடிக்கப்பட்டது என்பதை எழுதி இருக்க வேண்டும்.

>விடைத்தாளில் எழுதிய அனைத்தையும் ஒருவர் அடிக்க நேர்ந்தால், அது ஒழுங்கீன செயலாக கருதப்பட்டு, அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தப்படும். அதே போல, அவர்களால் அடுத்து வரும் இரண்டு பருவங்களுக்கு தேர்வு எழுத இயலாது.

தேர்வு தொடங்கும்-முடியும் நேரம்:

>+2 பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 1.15 மணி வரை நடைபெறுகிறது. 

>தேர்வு எழுதுபவர்களுக்கு சரியாக காலை 10 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும். 

>10 நிமிடங்கள் படிப்பதற்காக வழங்கப்படும். 

>10:10 மணியளவில் மாணவர்கள் எழுதுவதற்கான விடைத்தாள் வழங்கப்படும்.

>தேர்வாளர்கள் தங்களின் விவரங்களை சரிபார்த்த பின்னர் 10:15 மணிக்கு தேர்வெழுத தொடங்கலாம். சரியாக 1:15 மணிக்கு விடைத்தாள்கள் பெறப்பட்டுவிடும்.

+2 பொதுத்தேர்வு:

தமிழகத்தில் உள்ள சுமார் 7,518 பள்ளிகளை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர்களும், இந்த பொதுத்தேர்வினை எழுதுகின்றனர். இவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை 3,78,545 ஆகவும், மாணவிகளின் எண்ணிக்கை 4,24,023 லட்சமாகவும், தனித்தேர்வர்கள் 18,344 மற்றும் சிறைவாசிகள் 145 பேர் வீதம் மொத்தம் 8,21,057 பேர் இந்த பொதுத்தேர்வினை எழுதுகின்றனர். மொத்தம், 3,316 தேர்வு மையங்களில் இந்த பொதுத்தேர்வானது நடக்கிறது.

மேலும் படிக்க | CBSE Board Exams: இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு, மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க | 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : அதிக மதிப்பெண், அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டம் முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News