தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் கடலூரில் பெண் வழக்கறிஞர் உமா என்பவர் தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி கொடுத்த சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் சுப்புராயலு நகரில் இயங்கி வரும் குளோபல் அறக்கட்டளையின் கீழ் உள்ள மனவளர்ச்சி குன்றிய, தாய் தந்தையர் இல்லாத 10 குழந்தைகளை தேர்வு செய்து, கடலூரில் உள்ள துணிக் கடைக்கு அழைத்துச் சென்று குழந்தைகளுக்கு பிடித்த ஆடைகளை வழக்கறிஞர் உமா வாங்கிக் கொடுத்துள்ளர்.

ஆடைகளை வாங்கிக் கொண்ட குழந்தைகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது. வழக்கறிஞர் உமா அவர்களுக்கு குழந்தைகள் மனதார நன்றி தெரிவித்தனர்.

வழக்கறிஞர் உமாவின் இச்செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு பாராட்டையும் பெற்றுள்ளது. வழக்கறிஞர் உமா பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உடல்நல குறைபாடுள்ள, குடும்ப சூழலில் வளராத இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதை அனைவருமே கடமையாகக் கொள்வது சமுதாயத்திற்கு நல்லது. தங்கள் ரத்த சொந்தங்களைத் தாண்டி பிறருக்கு நல்லது செய்யும் குணம் அனைவருக்கும் இருந்தால், சமுதாயம் கூடிய விரைவில் ஏற்றம் காணும்.
மேலும் படிக்க | அடிச்சு ஊத்தப்போகுது.. நாளை இந்த 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!
மேலும் படிக்க | பாலியல் வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் விடுதலை ஆனது எப்படி? அன்புமணி சொல்லும் பாயிண்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









