)
எடப்பாடி: காந்தி ஜெயந்தியை ஒட்டி அக்டோபர் 2 தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது.
விடுமுறையை பயன்படுத்தி எடப்பாடி நகரம் ஒன்றிய பகுதிகளில் டாஸ்மாக் மதுபானத்தை வாங்கி சந்து கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
எடப்பாடி மற்றும் எடப்பாடி நகரம் ஒன்றிய பகுதிகளில் டாஸ்மாக் கடைஅருகில் செயல்படும் பார்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

டாஸ்மாக் கடை வேலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் ஒரு பாட்டில் மதுபானத்தை 50 ரூபாய் விலை அதிகம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இரவு பகல் பாராமல் மதுபான பார் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடை பெரும்பாலும் குடியிருப்பு பகுதியில் உள்ளது. 24 மணி நேரமும் குடியிருப்பு பகுதியில் மதுபானம் விற்பதால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் முகம் சுளித்து வருகின்றனர்.

இன்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை ஒட்டி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. விடுமுறையை ஒட்டி சந்து கடை மற்றும் டாஸ்மாக் பார் எடுத்து கடையை நடத்தக்கூடியவர்கள் மொத்தமாக மதுபானங்களை வாங்கி வைத்துக் கொண்டு பாட்டில் ஒன்றுக்கு ரூ.50 முதல் 100 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ