தவெக -வில் இணைந்த IRS அதிகாரி, அதிமுக, திமுக MLA -க்கள் பட்டியல்!

TVK Vijay Latest News: தவெக கொள்கை பரப்புச் செயலாளராக முன்னாள் ஐஆர்எஸ் அருண்ராஜ் நியமனம் மற்றும் அதிமுக, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்தனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 9, 2025, 02:54 PM IST
தவெக -வில் இணைந்த IRS அதிகாரி, அதிமுக, திமுக MLA -க்கள் பட்டியல்!

Tamilaga Vettri Kazhagam News In Tamil: தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். என்.ஆனந்த் வழிகாட்டுதலின் படி கொள்கை சார்ந்த செயல் திட்ட பணிகளை அருண்ராஜ் மேற்கொள்வார் என்று தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டிருக்கிறது.

Add Zee News as a Preferred Source

ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி தவெகவில் இணைந்தார்

ஓய்வு பெற்ற முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தமிழக வெற்றி கழகத்தில் இன்றைய தினம் கட்சியினுடைய தலைவர் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கின்றார். குறிப்பாக 2009 யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் சேலம், சென்னையிலும், அதே போன்று பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் பணியாற்றி இருக்கின்றார்.

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர்

ஐஆர்எஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இன்றைய தினம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கக்கூடிய அருண்ராஜுக்கு தமிழக வெற்றி கழகத்தினுடைய கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல் திட்டங்களை மேம்படுத்தும் வகையில் அருண்ராஜுக்கு இந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கின்றது.

தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை

மேலும் எந்த ஆலோசனைக்கு இணைய கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடைய வழிகாட்டுதல் படி, கழக கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்ட பணிகளை இவர் மேற்கொள்வார் கழக தோழர்களும் அனைத்து நிலைய நிர்வாகிகளும், புதிய பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பை நல்கி வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. 

 

தவெக-வில் இணைந்த அதிமுக, திமுக எம்எல்ஏக்கள்

மேலும் இவரைத் தொடர்ந்து, இன்றைய தினம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜலட்சுமி, அதே போன்று முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், முன்னாள் நீதிபதி சுபாஷ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பல்வேறு தரப்பிலிருந்தும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க - விரைவில் நல்ல செய்தி.. 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி - பாமக நிறுவனர் ராமதாஸ்

மேலும் படிக்க - அமித்ஷா பேசியது அப்பட்டமான பொய்... ஆதாரம் இருக்கா...? கொந்தளித்த ஆ.ராசா!

மேலும் படிக்க - NDA கூட்டணியில் விஜய்யா?.. நயினார் நாகேந்திரன் ஓபன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News