LIVE யாருக்கு வெற்றி? பாஜக - திமுக.. ஈரோடு கிழக்கு, டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை! முக்கிய அப்டேட்

Live Updates Of Erode By Election Delhi Election Results : தமிழக மற்றும் இந்திய அரசியல் கலத்தில் இன்று முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைப்பெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. அதே போல, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாக இருக்கிறது. 

Written by - Yuvashree | Last Updated : Feb 8, 2025, 09:27 PM IST
    Erode By Election & Delhi Election Results Latest Updates: ஈரோடு கிழக்கு மற்றும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் லேட்டஸ்ட் அப்டேட்
Live Blog

Erode By Election & Delhi Election Results Live Updates: வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என காலை 9:30 மணிக்குள் எதிர் பார்க்கப்படுகின்றன. பிற்பகல் 1 மணிக்குள், டெல்லி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்வார்கள் என்பதற்கான தெளிவான அறிகுறி தெரிந்துவிடும்.70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிலைநாட்ட ஒரு அரசியல் கட்சிக்கு 36 இடங்கள் தேவை. ஈரோடு கிழக்குத் தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினர் யார்? என்பதைத் தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு நடக்கிறது. 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் எங்களை (ZEE TAMIL NEWS) பின்தொடருங்கள்..

8 February, 2025

  • 21:26 PM

    சீரகம் மற்றும் வெந்தயம் நன்மைகள்

    ரகம் மற்றும் வெந்தயம் இரவு நேரத்தில் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. (முழு விவரம்)

  • 20:59 PM

    போஸ்ட் ஆபீஸ் மூலம் சம்பாதிப்பது எப்படி?

    Post Office | போஸ்ட் ஆபீஸ் மூலம் நீங்கள் மாதம் 40 ஆயிரம் ரூபாய் பெறுவது எப்படி? என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 20:34 PM

    திருப்பத்தூரில் பயங்கரம்! சித்தி கொலை, சித்தப்பாக்கு சரமாரி வெட்டு 

    திருப்பத்தூரில் சித்தியை கொலை செய்த இளைஞர் காவல்துறையிடம் கொடுத்த பகீர் வாக்குமூலத்தின் விவரம் வெளியாகியுள்ளது. சித்தப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். (முழு விவரம்)

  • 20:28 PM

    பூசணி இலைகளில் இருக்கும் சத்துக்கள் பற்றி தெரியுமா? 

    Pumpkin | பூசணிக்காய் இலைகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மாதவிடாய், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்பதை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 18:53 PM

    பாஜக கட்சித் தலைமையகத்தில் பிரதமர் மோடி

    டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, கட்சித் தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். டெல்லி மக்கள் அளித்த தீர்ப்பிற்கு நன்றி தெரிவித்த மோடி, "உங்கள் அன்பை வளர்ச்சியின் வடிவத்தில் நூறு மடங்கு திருப்பித் தருவோம். டெல்லியின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் டெல்லியை இரட்டிப்பு வேகத்தில் மேம்படுத்தும்" என்றார்.

     

  • 18:49 PM

    புதன் பெயர்ச்சி - 3 ராசிகளுக்கு நல்ல நேரம்

    Budhan Peyarchi | புதன் பெயர்ச்சி அடைந்து பாவ கிரகத்தின் நட்சத்திரத்துக்கு செல்ல இருப்பதால் 3 ராசிகளுக்கு ஆடம்பர வாழ்க்கை கிடைக்கப்போகிறது. (முழு விவரம்)

  • 18:40 PM

    கொலஸ்ட்ரால் முதல் யூரிக் அமிலம் வரை... சுக்கு செய்யும் மாயங்கள் பல

    உலர்ந்த இஞ்சி சுக்கு என அழைக்கப்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த சுக்கு, ஆயுர்வேதத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற மருந்தாகும்.இது குறித்து விரிவாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.

  • 18:21 PM

    மத்திய அரசு வீடு திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    மத்திய அரசு PM Awas Yojana திட்டத்தின் கீழ் புது வீடு கட்ட எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 18:20 PM

    மூத்த குடிமக்களுக்கு லேயர் பெர்த்  கிடைக்க சில டிப்ஸ்

    மூத்த குடிமக்கள்பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே அவர்களுக்கான லோயர் பெர்த் முன்பதிவுக்கான சில விதிகளைத் தயாரித்துள்ளது. இது குறித்து விரிவாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

  • 18:17 PM

    கெட்ட கொழுப்பை கச்சிதமாய் குறைக்க இந்த உணவுகள் உதவும்

    கொலஸ்ட்ரால் அளவை குறைக்க நாம் நமது டயட்டில் சேர்க்கக்கூடிய சில முக்கிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

     

  • 18:14 PM

    உடலுக்கு நன்மை பயக்கும் ஆரோக்கியமான மூலிகை தேநீர் வகைகள்

    உடல் ஆரோக்கியம் சிறக்க டீ, காபிக்கு பதிலாக இவற்றை குடித்து பாருங்கள். உடலுக்கு நன்மை பயக்கும் ஆரோக்கியமான மூலிகை தேநீர் வகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

     

  • 17:45 PM

    PF க்ளெய்ம் நிலையை அறியும் எளிய வழி

    EPFO  அமைப்பில் உள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், க்ளெய்ம் செட்டில்மெண்ட் செயல்முறையை எளிதாக்குவதற்கு EPFO ​​அவ்வப்போது விதிகளை மாற்றி அல்லது திருத்தி அமைக்கும். (மேலும் அறிய)

  • 17:11 PM

    விராட் கோலி படைக்கப்போகும் சாதனைகள்

    இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல உலக சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது. சச்சின், சங்ககரா உடன் எலைட் லிஸ்டில் இடம் பெறப்போகிறார். (முழு விவரம்)

  • 17:04 PM

    மன அழுத்தம் முதல் கொலஸ்ட்ரால் வரை... ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த பிரிஞ்சி இலை கை கொடுக்கும்

    குருமா, பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளை தயாரிக்கும் போது, நாம் பயன்படுத்தும் பிரிஞ்சி இலை, ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டதுடன், உடல் எடையை குறைப்பது முதல், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது வரை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.(மேலும் அறிய)

     

  • 17:00 PM

    மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: மாதா மாதம் ரூ.20,500 வருமானம்

    SCSS திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? இதன் மூலம் மாதா மாதம் நல்ல வருமானம் பெற என்ன செய்ய வேண்டும்? இவை குறித்து இந்த பதிவில் காணலாம்.

  • 16:38 PM

    நுரையீரல் புற்றுநோய்... முக்கிய எச்சரிக்கை

    நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அது ஏன் என்பதற்கான முக்கிய காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 16:02 PM

    CGHS முக்கிய செய்தி: அரசு ஊழியர்கள், ஓய்வூத்யதாரர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள்

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. சுகாதார அமைச்சகம் புதிய சிஜிஎஹ்எஸ்  வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 15:47 PM

    அசிடிட்டி, நெஞ்செரிச்சல் அடிக்கடி வருகிறதா? 

    Acidity | அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் அடிக்கடி வருவதற்கான காரணங்கள், அதனால் ஏற்படும் பின்விளைவுகள், குணப்படுத்த வீட்டு வைத்தியம் ஆகியவற்றை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 15:38 PM

    டெல்லி சட்டமன்ற தேர்தலில், பாஜக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கட்சித் தொண்டர்களைப் பாராட்டி, பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். (மேலும் படிக்க)

  • 14:49 PM

    மகன் திருமணத்தை முன்னிட்டு ரூ.10,000 கோடியை நன்கொடையாக வழங்கிய அதானி

    இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானியும் திவா ஷாவும் திருமணம் செய்து கொண்டனர். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற்ற திருமண விழாவில், ஜீத் அதானி, வைர வியாபாரியின் மகளான திவா ஷாவை கரம் பிடித்தார். இந்த நிலையில், கோடீஸ்வரர் கவுதம் அதானி திருமணத்தை முன்னிட்டு, ரூ.10,000 கோடியை நன்கொடையாக வழங்கினார். அவரது நன்கொடையின் பெரும்பகுதி சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு செலவிடப்பட உள்ளது. இது குறித்த விரிவான தகவல் இதோ.

  • 14:34 PM

    PM Kisan:19வது தவணை இந்த நாளில் வரும், அதற்கு முன்..

    பிஎம் கிசான் தவணை பணம் உங்கள் கணக்கில் எப்போது வரும்? இதன் 19வது தவணையின் வெளியீட்டுத் தேதி என்ன? விவசாயிகள் தங்கள் e-KYC-ஐ எப்படி செய்து முடிப்பது? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.

  • 14:34 PM

    கள்ளச்சாராயம் குறித்து புகார் அளிக்கலாம்

    Kallakurichi | கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் குறித்து வாட்ஸ் எண்ணில் புகார் அளிக்க மொபைல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. (முழு விவரம்)
  • 14:05 PM

    கொத்து பரோட்டாவுக்காக அட்ராசிட்டி!

    தஞ்சாவூர் வண்டிக்காரத் தெருவில் உள்ள ஹோட்டலில் கொத்து புரோட்டா இல்லை என‌ கூறியதால் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்களால் பரபரப்பு. (வீடியோ லிங்க்)

  • 13:46 PM

    2025-ல் அஜித்துக்கு அடித்த லக்! 

    Good Things Happened To Ajith Kumar In 2025 : அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும், இந்த ஆண்டு ராசியான ஆண்டாக அமைந்திருக்கிறது. அது ஏன் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:42 PM

    அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி

    Who Is Parvesh Sahib Singh Verma? புது தில்லி சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா யார்? தெரிந்துக்கொள்ளுங்கள். (மேலும் படிக்க)

  • 13:33 PM

    பணத்தாசையால் பதவியை இழந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்: மனம் திறந்த அண்ணா ஹசாரே

     

    மதுபானக் கொள்கை வழக்கு மற்றும் பணத்தின் மீதான அவரது பேராசையை ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு முக்கிய காரணமானதாக அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். 

     

  • 13:25 PM

    அரவிந்த் கெஜ்ரிவாலின் பேராசையே காரணம்: அண்ணா ஹசாரே

    2025 டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்ததற்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் 'பணத்தின் மீதான பேராசை' தான் காரணம் என்று அண்ணா ஹசாரே கூறியுள்ளார்.

  • 13:18 PM

    கூடவே இருந்து குழி பறிப்பவர்களை கண்டுபிடிப்பது எப்படி?

    How To Identify A Bad Person : நம்முடன் இருக்கும் சிலர் நமக்கே தெரியாமல் நமக்கே குழி பறிப்பதுண்டு. அவர்களை கண்டுபிடிக்க சிறு சிம்பிள் டிப்ஸ். (மேலும் படிக்க)

  • 13:11 PM

    டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு

    TASMAC | வள்ளலார் நினைவு நாளையொட்டி வரும் 11 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (முழு விவரம் இங்கே...)

  • 13:09 PM

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தல் முடிவு நேரலை: திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை

    தற்போதைய நிலவரப்படி, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 49,312 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். என்.டி.கே வேட்பாளர் எம்.கே.சீதாலட்சுமி 10.587 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 1,590 வாக்குகள் கிடைத்தன. (மேலும் படிக்க)

  • 12:53 PM

    டெல்லியில் காங்கிரஸ் "கை" உயருமா?

    Congress Latest News: டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன? 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒருசில இடங்களையும் வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. (முழு விவரம்)

  • 12:35 PM

    உடல் பருமனுக்கு நிவாரணம் அளிக்கும் 5 சிறப்பு டீடாக்ஸ் பானங்கள்

    உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? தொப்பை கொழுப்பு பாடாய் படுத்துகிறதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

  • 12:24 PM

    சாய் பல்லவியின் தண்டேல் படம் எப்படி உள்ளது?

    Thandel Movie Review Tamil : சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா நடித்துள்ள தண்டேல் படம் உலகம் முழுவதும் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் எப்படி உள்ளது என்று பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 12:21 PM

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தல் முடிவு நேரலை

    மூன்றாவது சுற்றுக்குப் பிறகு திமுகவின் சந்திரகுமார் 18,652 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

    மூன்றாம் சுற்று முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 22,682 வாக்குகளைப் பெற்று, என்.டி.கே வேட்பாளர் எம்.கே. சீதாலட்சுமியை விட 18,652 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார், அவர் 4,030 வாக்குகளைப் பெற்றுள்ளார். நோட்டாவிற்கு 775 வாக்குகள் பதிவாகியுள்ளன. (மேலும் படிக்க)

  • 12:20 PM

    7வது ஊதியக்குழு: 56% அல்லது 57%? டிஏ உயர்வு எவ்வளவு?

    ஜனவரியில் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும்? அகவிலைப்படி 56% ஆக உயருமா அல்லது 57% ஆக அதிகரிக்குமா? அதாவது டிஏ 3% உயருமா அல்லது 4% உயருமா? இதை பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

     

     

  • 12:16 PM

    பாஜக தொண்டர் புனித் வோஹ்ராவின் ஆனந்த கண்ணீர்

    தேசிய தலைநகரில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான பாதையில் உள்ள நிலையில், கொண்டாட்டங்களின் போது பாஜக தொண்டர் புனித் வோஹ்ரா உணர்ச்சிவசப்படுவதை காண முடிந்தது.

     

  • 12:05 PM

    காந்தம் வைத்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்!

    Man Earns 4000 Rupees Daily In Maha Kumbh : மகா கும்பமேளாவில் பணம் சம்பாதிக்க ஒரு நபர் வித்தியாசமான வழியை கண்டுபிடித்திருக்கிறார். இதைப்பார்த்த அனைவரும் திகைத்து போயுள்ளனர். (மேலும் படிக்க)

  • 11:38 AM

    எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க... டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டியவை...

    பலவீனமான எலும்புகள் நமது இயல்பு வாழ்க்கையை மோசமாக பாதிக்கும். எலும்புகள் பலவீனம் அடைந்தால் கை, கால்களில் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, கீல்வாதம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகள் உண்டாகும் அபாயம் அதிகரிக்கும். இதனை தவிர்க்க டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

  • 11:35 AM

    Delhi Election 2025 Result: தோல்வி முகத்தில் ஆம் ஆத்மி... சில முக்கிய காரணங்கள் இதோ

    தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியான நிலவரத்தின் படி, டெல்லி தேர்தல்களின் முன்னிலை நிலவரங்கள், மூலம் பாஜக தெளிவான பெரும்பான்மையைப் பெறுவதாகத் தெரிகிறது. 2013, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பின்தங்கியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தான் போட்டியிட்ட த்குதியில், மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி பின் தங்கியதற்கான காரணங்கள் என்ன என்பதற்கான விடையை இந்த கட்டுரையில் பெறலாம்.

     

  • 11:16 AM

    டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? 

    Who Will Be Next Chief Minister In Delhi: ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து டெல்லியில் வெற்றி பெற்றால் பாஜகவின் முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? (முழு விவரம்)

  • 11:13 AM

    லவ் ஹார்மோன்களை அதிகரிக்கும் 7 பழக்கங்கள்!

    Daily Habits That Improve Love Hormones: உங்கள் பாலியல் மற்றும் லவ் ஹார்மோன்களை அதிகரிக்க, சில பழக்கங்கள் உதவும். அவை என்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 11:05 AM

    மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார அதிர்ஷ்ட ராசிகள் எவை

    Weekly Horoscope: பிப்ரவரி 10ம் தேதியுடன் துவங்கும் வாரத்தில், சில ராசிகளுக்கு, பண வரவு கிடைப்பதுடன் சாதகமான பலன்களைத் தரும் என்றும், அதே சமயம் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.இந்த வார ராசி பலனை முழுமையாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.

  • 10:53 AM

    காதலி என வதந்தி பரவிய பெண்ணுடன் ரவி மோகன்!!

    Ravi Mohan Wishes Kenishaa On Her Birthday : கோலிவுட்டின் பிரபல நடிகராக விளங்கும் ரவி மோகன், காதலி எனக்கூறப்பட்ட கெனிஷாக்காக வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 10:15 AM

    டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்  இப்போதைய முன்னிலை நிலவரம்

    மொத்த இடங்கள் 70 

    பாஜக - 43 இடங்களில் முன்னிலை

    ஆம் ஆத்மி கட்சி - 27 இடங்களில் முன்னிலை

    காங்கிரஸ் கட்சி - 0 இடத்தில் முன்னிலை

  • 10:06 AM

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தல் முடிவு நேரலை

    இரண்டாவது சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 6862 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

    திமுக வேட்பாளர் சந்திரகுமார் - 8108 வாக்குகள்
    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி - 1247 வாக்குகள்

  • 10:04 AM

    டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேரலை

    தற்போதைய நிலவரப்படி, ​​27 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பாஜக டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிகிறது. 2015 முதல் டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, இந்தமுறை தனது வெற்றியை பறிகொடுக்கும் நிலையில் உள்ளது. 

    பாஜகவுக்கு காங்கிரஸ் ஒரு வைல்ட் கார்டாக மாறி வருகிறது. கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாமல் போகலாம், ஆனால் பல தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக வெற்றி பெற உதவுகிறது. (மேலும் படிக்க)

  • 09:59 AM

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தல் முடிவு நேரலை

    முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 6,880 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். (மேலும் படிக்க) 

    திமுக வேட்பாளர் சந்திரகுமார் - 7961 வாக்குகள்
    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி - 1081 வாக்குகள்

  • 09:57 AM

    ஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% கூடுதல் ஓய்வூதியம்: அரசின் புதிய வழிகாட்டுதல், முக்கிய அப்டேட் இதோ

    மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியரா நீங்கள்? உங்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் குறித்த முக்கிய அப்டேட் உள்ளது.

     

Trending News