LIVE Blog union budget 2025, Nirmala Sitharaman | மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்தார். தனி நபர் வருமான வரி உச்ச வரம்பை 12 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார். நேரடி வரி விதிப்பு முறையில் மிகப்பெரிய மாற்றங்களை செய்திருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆகஸ்ட் மாதம் புதிய வருமானவரி சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு மற்றும் வரிச்சலுகை வரம்புகளையும் உயர்த்தி மகிழ்ச்சியான செய்தி கொடுத்துள்ளார். விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் பிற முக்கிய அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. அவை குறித்த விரிவான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....










