LIVE : நடிகர் மனோஜ் உடலுக்கு திரைப்பிரபங்கள் அஞ்சலி, அதிமுக பாஜக கூட்டணி, சென்னையில் என்கவுண்டர் - இன்றைய அப்டேட்ஸ்

LIVE Tamilnadu : இயக்குநர் பாரதிராஜா மகன் நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி. அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல், சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் என்கவுண்டர் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 26, 2025, 06:53 PM IST
    Tamilnadu Live News : தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Live Blog

LIVE Tamilnadu, Actor Manoj Last Rites : இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் சேத்துப்பட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் மனோஜின் உடலுக்கு திரைப் பிரபலங்கள் காலை முதல்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் நேற்றிரவு நேரில் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று நடிகர்கள் விஜய், சூர்யா, பிரபு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இன்னும் பல முக்கியஸ்தர்ஸ் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு இறுதி மரியாதை நடைபெற இருக்கிறது. 

2026ல் சட்டப்பேரவை தேர்தல் வர இருப்பதால் அதிமுக - பாஜக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றுள்ளது. நேற்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முனுசாமி, எஸ்பி வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம் ஆகியோர் இதுதொடர்பாக சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். அவர் எடப்பாடி பழனிசாமிக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அதிமுக பாஜக கூட்டணி ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், வரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

சென்னையில் நேற்று காலை 6 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டது. அவர்களை விசாரித்த சென்னை காவல்துறை நள்ளிரவில் நகைகளை மீட்க அழைத்துச் சென்றபோது கொள்ளை கும்பலின் முக்கிய நபர் ஜாபர் குலாம் ஹூசைன் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இதுதவிர இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....

26 March, 2025

  • 18:51 PM

    LPG Cylinder: எல்பிஜி சிலிண்டருக்கு தட்டுப்பாடு

    தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 6 தென் மாநிலங்களில் எல்பிஜி சிலிண்டருக்கு தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்து முழுமையாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 18:08 PM

    Weight Loss Journey: 37 கிலோவை குறைத்த பெண் மருத்துவர் - எப்படி?

    பெண் மருத்துவர் ஒருவர் 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக முயற்சித்து 37 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அவரின் உடல் எடை குறைப்பு பின்னணியை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 17:29 PM

    Uric Acid Control: இந்த உணவுகள் உதவும்

    யூரிக் அமில அளவை இயற்கையான வழியில் கட்டுப்படுத்த உதவும் சில உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 17:26 PM

    Sukran Peyarchi: அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்

    சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் யாருக்கு அதிக லாபம்? யாருக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்? இந்த பதிவில் விவரங்களை காணலாம்.

  • 16:54 PM

    Traffic Rules: செருப்பு போட்டு கார் ஓட்டலாமா...? கூடாதா...?

    செருப்பு போட்டு கார் ஓட்டுவது சரியா, தவறா என்பதை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 16:53 PM

    காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் ஊற வைத்த வெந்தயம்

    வெந்தயத்தை சரியான அளவிலும், சரியான முறையிலும் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், பல உடல்நல பிரச்சனைகளை சமாளிக்கலாம். மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தய விதைகளின் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

     

  • 16:45 PM

    மாதம் ரூ. 1 லட்சம் வருமானம் தரும் பரஸ்பர நிதியம்

    ஓய்வூதியத் திட்டத்தைத் சரியான நேரத்தில் தொடங்குவதன் மூலம், கோடிகளில் நிதியை சேர்த்து, ஓய்வு காலத்தில் நிதி ரீதியாக பாதுகாப்பான வாழ்க்கையை வாழலாம். இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

  • 16:03 PM

    Edappadi Palanisamy Press Meet: சென்னை வந்த எடப்பாடி பழனிசாமியின் பேட்டி

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருந்து இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியவற்றை இதை கிளிக் செய்து படிக்கவும்.

  • 15:30 PM

    ஆதாரில் உள்ள தகவல்களை மாற்ற/ திருத்துவதற்கான விதிகள்

    ஆதார் அட்டையில் தவறாக  பதிவான, பெயர், பிறந்த தேதி  உள்ளிட்ட தகவல்களை அப்டேட் செய்து திருத்த அல்லது மாற்றுவது தொடர்பான விதிகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்வோம்.

  • 14:40 PM

    கோடை கால நன்மைகளும், தீமைகளும்..!

    Summer Health Tips : கோடைகாலத்தில் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் ஒருவருக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்னென்ன தீமைகள் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழுவதும் இங்கே படிக்கவும்)

  • 14:37 PM

    Yogi Adityanath Interview: யோகி நேர்காணல் - முழு விவரம்

    உத்தர பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் பாதுகாப்பு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீதான கடுமையான விமர்சனங்கள், மசூதி - கோயில் விவகாரங்கள் ஆகியவை குறித்து விரிவாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேர்காணல் ஒன்றில் பேசி உள்ளார். இதனை முழுமையாக படிக்க இதை கிளிக் செய்யுங்கள்

  • 13:55 PM

    SIP மற்றும் PPF இரண்டிலும் ஆண்டுதோறும் ரூ.65,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது, ​​15 ஆண்டுகளில் நீங்கள் எவ்வளவு கார்பஸை உருவாக்க முடியும் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்..

  • 13:47 PM

    EPS Pension Calculator: ஓய்வூதிய கணக்கீடு

    ரூ.55,000 அடிப்படை சம்பளம் மற்றும் 30 ஆண்டுகள் சேவையுடைய ஒரு ஊழியருக்கு, மாத ஓய்வூதியமாக எவ்வளவு கிடைக்கும்? இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.

  • 13:12 PM

    Gajkesari Rajayog: இந்த 3 ராசிகளுக்கு குஷி

    குரு பகவானும், சந்திரனும் ரிஷப ராசியில் இணைவதால் இந்த 3 ராசிகளுக்கு கஜகேசரி ராஜயோகத்தின் பலன்கள் முழுமையாக கிடைக்கும். இதுகுறித்து முழுமையாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

  • 13:05 PM

    தினம் ஒரு கைப்பிடி முருங்கை கீரை போதும்

    முருங்கை கீரையின் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றியும், அதனை தினமும் ஒரு கைப்பிடி உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

  • 12:49 PM

    UPS vs NPS vs OPS: உங்களுக்கு எது சிறந்தது?

    மூன்று ஓய்வூதியத் திட்டங்களுக்கு இடையில் உள்ள அடிப்படை வேறுபாட்டைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 12:46 PM

    Benefits of Bitter Gourd: பயனுள்ள ஹெல்த் டிப்ஸ்

    பாகற்காய் உட்கொள்வதன் மூலம் சிறந்த செரிமானம், எடை மேலாண்மை, உடல் நச்சு நீக்கம் ஆகியவை உட்பட பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.

  • 12:26 PM

    வீடு வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

    New Home Financial Tips : நீங்கள் புதிதாக வீடு வாங்கும்போது சொத்தில் மனைவியையும் பங்குதாரராக சேர்த்தால் வரிச்சலுகையில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம் இங்கே)

  • 11:51 AM

    மகிழ்ச்சியாக இருக்க 7 வாழ்க்கை விதிகள்!

    மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான 7 வழிகாட்டும் விதிகளைக் கற்றுக்கொண்டு உங்கள் மகிழ்ச்சியைக் கண்டறியவும். மேலும் படிக்க

     

     

  • 11:17 AM

    பெண்கள் ஆரோக்கியம் முக்கிய தகவல்கள்

    Menstrual Cycle : மாதவிடாய்க்கு பிறகு குழந்தைகள் கருத்தரிக்க வாய்ப்பு அதிகம் உள்ள நாட்கள், கருத்தரிப்பு வாய்ப்பு குறைவான நாட்கள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 10:46 AM

    8th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி

    8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ.14,000 முதல் ரூ.19,000 வரை அதிகரிக்கக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

  • 09:45 AM

    ஆப்பிளுக்கு நிகரான சத்துக்கள் கொண்ட பேரிக்காய்

    வேர்க்கடலையை ஏழைகளின் பாதாம் என்று அழைப்பது போல், ஆப்பிளை போன்றே வியக்கத்தக்க வகையில் சத்துக்களை கொண்டு பேரிக்காயை ஏழைகளின் ஆப்பிள் என்று கூறும் வழக்கம் உண்டு. இதில் அந்த அளவிற்கு சத்துக்கள் உள்ளன. எனவே இதை குறைத்து மதிப்பிடுவது மிகவும் தவறு. மேலும் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

     

  • 09:44 AM

    EPF Withdrawal Rules: விதிகளில் மாற்றம்

    டிஜிட்டல் முறையை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ள EPFO, UPI அடிப்படையிலான க்ளெய்ம் செயலாக்கத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 09:40 AM

    ரேஷன் கார்டு : மக்களுக்கு 2 குட்நியூஸ்

    Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு நாட்களில் இரண்டு குட்நியூஸ்களை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே பார்க்கலாம். (முழு விவரம்)

  • 09:39 AM

    மைதா மாவு உணவு கேடுகள்..!

    Maida side effects : மைதாவில் செய்யப்படும் உணவுகளை உண்பதால் உடலுக்கு ஏற்படும் மிகப்பெரிய கேடுகள் குறித்து அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..(முழு விவரம்)

  • 09:39 AM

    சென்னையில் கொள்ளையன் என்கவுண்டர்

    Chennai encounter : சென்னையில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உத்தரப்பிரதேச செயின் பறிப்பு கொள்ளையன் கொல்லப்பட்டார். இது குறித்த பரபரப்பு பின்னணி தகவல் வெளியானது. (முழு விவரம்)

  • 09:38 AM

    இன்றைய ராசிபலன் 

    Rasipalan : இன்றைய ராசிபலன் மார்ச் 26 புதன்கிழமை நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது என்பதால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் (முழு விவரம்)

  • 09:13 AM

    7th Pay Commission: முக்கிய அறிவிப்பு

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 பரிசுகள் கிடைக்கவுள்ளன. இன்றே இதற்கான அறிவிப்பு வர வாய்ப்புள்ளது. இதன் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Trending News