Tamilnadu LIVE Today : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை தமிழ்நாடு வருகிறார். சென்னையில் தங்கும் அவர், தமிழ்நாடு பாஜக தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். அதில் தமிழ்நாட்டுக்கு புதிய மாநில தலைவர் தேர்வு உள்ளிட்டவற்றை இறுதி செய்யும் அவர், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையையும் நடத்துகிறார். இதுதவிர, தமிழ்நாட்டின் முக்கிய பத்திரிக்கையாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரையும் சந்தித்து பேச இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. நடிகர் அஜீத்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. முழுக்க முழுக்க அஜீத் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட இப்படத்தின் விம்ரசனங்கள் வெளியாகியுள்ளன. இதுதவிர இன்றைய நாளின் முக்கிய அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...










