Tamilnadu Live News Today | மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2025 சனிக்கிழமை தாக்கல் செய்தார். அதில் வருமான வரி உச்ச வரம்பு உயர்வு, விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு வரம்பு உயர்வு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் தமிழ்நாடு திட்டங்களுக்கு எந்த நிதியும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கனிமொழி எம்பி, திருமாவளவன் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். மும்பையில் பிசிசிஐ நடத்திய விருது விழாவில் அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட மிக முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.....










