Tamilnadu LIVE Today : பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமேஸ்வரம் வருகை தந்தார். ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்த அவர், பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்துகிறார். இதனையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும், ராமேஸ்வரத்துக்கு புதிதாக 28 ரயில்கள் செல்லும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதவிர இன்றைய நாளின் முக்கிய அப்டேட்டுகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்...










