Tamilnadu Live Today : மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு எம்பிகளை நாகரீகமற்றவர்கள் என விமர்சனம் செய்ததற்கு நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். அதேநேரத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்பது குறித்து தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அந்த கடிதத்தில் தமிழ்நாடு எந்த இடத்திலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக கூறவில்லை என்பதை அடிக்கோடிட்டு சுட்டிக்காட்டியுள்ளார். இதுதவிர இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....










