Tamilnadu LIVE Today : நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு கொண்டு வந்த வஃக்பு வாரிய சட்டமசோதா நிறைவேறியது. இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா மீது விவாதம் நடைபெறுகிறது. இந்திய பொருட்களுக்கான வரியை 26 விழுக்காடு விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிர்ம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை சஞ்சு சாம்சன் மீண்டும் ஏற்றுள்ளார். இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதுதவிர இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.....










