Tamil Nadu Today Latest News LIVE Updates: தமிழ்நாட்டின் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 5 மணிநேரம் முதல் 7 மணிநேரம் வரை மின்வெட்டு இருக்கும் என மின்சார வாரியம் அறிவிப்பு. கடந்த ஜன.31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று முக்கியமான நாளாகும். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை உரையாற்ற உள்ளார். மேலும், டெல்லி சட்டப்பேரவை தேர்தலும், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் நாளை (பிப். 5) நடைபெற இருப்பதால் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.