Live: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு! பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! அல்லு அர்ஜூன் விடுதலை; IND vs AUS அப்டேட்
Tamil Nadu Today Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா என இன்றைய (டிச. 14) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
Tamil Nadu Today Latest News Live Updates: இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (TN School Colleges Leave Update) அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலை மற்றும் மழை சார்ந்த அப்டேட்கள் தொடர்ந்து வர உள்ளன. பார்டர் - கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy) தொடரின் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. நேற்று கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூனுக்கு பிணை (Allu Arjun Bail) வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவர் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது, அந்த வகையில், உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா என இன்றைய (டிச. 14) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Latest Updates
குட் நியூஸ்:
EPF Claim விதிகளில் மாற்றம், இனி பிஎஃப் பணத்துடன் அதிக வட்டி கிடைக்கும்
பொங்கல் சிறப்பு தொகுப்பு - யார் யாருக்கு கிடையாது?
வருகிறது பொங்கல் சிறப்பு தொகுப்பு... ஆனால் இவர்களுக்கு கிடையாது - ரேஷன் அட்டைத்தாரர்கள் வெயிட்டிங்!
தனிமையில் இருந்து தப்பிக்க 7 அற்புத வழிகள்!!
பலர், தனிமையில் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என தெரியாமல் இருப்பர். அவர்கள் அதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Flipkart Super Value Days Sale:
இன்று முதல் லைவ்: பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் அட்டகாசமான சலுகை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான இரங்கல்
இவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான இரங்கல்
ஈவிகேஎஸ் இளங்கோவன் - முழு அரசியல் வாழ்வு இதோ
கருணாநிதி, ஜெயலலிதாவை எதிர்த்தவர்... சாதனைகளும்... சர்ச்சைகளும் - யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்?
சங்கீதாவிற்கு நீதி கேட்கும் நெட்டிசன்கள்..!
இளங்கோவன் மரண செய்தியில் சர்ச்சை!
சிறையில் இருந்து வந்தவுடன் அல்லு அர்ஜுன் சொன்ன விஷயம்!
அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் ஜாக்பாட்:
நீரிழிவு நோயாளியா நீங்கள்?
சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவும் கற்றாழை சாறு: இப்படி குடித்தால் அதிக பலன்
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
EVKS Elangovan: இன்று 75 வயதான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். (முழு விவரம்)
புதிய சாதனை படைத்த பிஎஸ்என்எல்
BSNL Latest News: பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது 2024 ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் பிற தொலைத்தொடர்பு நெட்வொர்க்கில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர். அதுமட்டுமின்றி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. (முழு விவரம்)
ஊழியர்களுக்கு அதிர்ச்சி:
இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது... விதியில் அரசு செய்த மாற்றம்
காருக்குள் தவித்த நபர்... பரபரப்பு வெள்ள காட்சிகள்
சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்... உள்ளே சிக்கிய நபர் - பரபரப்பு காட்சிகள்
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை
மூத்த காங்கிரஸ் தலைவரான இவிகேஸ் இளங்கோவனுக்கு மீண்டும் வென்டிலேட்டர் உதவி உடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிக லாபம் தரும் ஜாக்பாட் திட்டம்
மூத்த குடிமக்களுக்கு பொன்னான திட்டம்... அதிக வட்டி தரும் SBI FD - எவ்வளவு தொகை வரும் தெரியுமா?
ஆதார் அட்டை முக்கிய அப்டேட்
பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட் செய்வதற்கு இன்று (டிசம்பர் 14) கடைசி நாள் (இலவசமாக ஆதார் அட்டை எப்படி அப்டேட் செய்வது -முழு விவரம்)
சனி பெயர்ச்சி 2025:
புத்தாண்டில் வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிகள் இவைதான், ராஜவாழ்க்கை அமையும்
காலை உணவு - ஹெல்த் டிப்ஸ்
அவித்த முட்டையா... ஆம்லேட்டா... காலை உணவில் எதை சாப்பிடலாம்? எதில் அதிக நன்மை?
இன்றைய ராசிபலன்
டிசம்பர் 14 இன்றைய ராசிபலன் - நல்ல நேரம் எப்போது?; இந்தெந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி உண்டாகும்!
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அப்டேட்
கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, விழுப்புரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
IND vs AUS: மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தம்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரின் காபா கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தற்போது இரண்டாவது முறையாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்திய அணி 13.2 ஓவர் வீசியுள்ளது. ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 19 ரன்களுடனும், மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
சிறையில் இருந்து வெளியே வந்தார் அல்லு அர்ஜூன்
ஹைதராபாத் நகரில் புஷ்பா 2 படத்தை திரையரங்கில் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில், ஹைதராபாத் உயர் நீதிமன்றம் நேற்றே ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. எனினும் நேற்றிரவு முழுவதும் சிறையில் இருந்த அல்லு அர்ஜூன், இன்று காலை வெளியே வந்தார்.