TN Budget Highlights LIVE வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்... பயிர்க்கடன் மற்றும் இலவசங்களை அறிவித்த தமிழக அரசு

Tamilnadu Agriculture Budget 2025 LIVE : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள், புதிய திட்டங்கள் குறித்த அப்பேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளவும்

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 15, 2025, 09:19 PM IST
    Tamilnadu Agriculture Budget 2025 LIVE : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 தொடர்பான அனைத்து முக்கிய அறிவிப்புகளின் அப்ட்டேடுகளையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
Live Blog

Tamilnadu Agriculture Budget 2025 LIVE Today : தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விவசாயிகள் எதிர்பார்த்த பல அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. பயிர்க்காப்பீடு, நெல்கொள்முதல், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட பல அறிவிப்புகள் இந்த வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறுள்ளது. 

15 March, 2025

  • 21:13 PM

    நோ சுகர் டயட் மூலம் உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்

    No Sugar Diet:  ஒரே ஒரு மாதம் சர்க்கரை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தினால் போதும். வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை, நீங்களே வியந்து போகும் வண்ணம் உடல் ஆரோக்கியத்தில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும். அதனால் பல நன்மைகளை கண் கூடாக உணராலாம்.

  • 20:45 PM

    குடல் பூச்சிகளை அழிக்கும் ஆற்றல் கொண்ட சில உணவுகள்

    குடலில் புழு பூச்சிகள் இருந்தால், அவை உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் சேராமல் போவதோடு, வயிற்று வலி, செரிமான பிரச்சனைகள் உள்ளிட்ட பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம். குடலில் உள்ள புழு பூச்சிகளை அழிக்கும் ஆற்றல் கொண்ட உணவுகளை உண்பதால், இயற்கையான தீர்வை பெறலாம்.

  • 20:15 PM

    World News: நீண்ட கூந்தை வளர்க்கும் சீன பெண்கள்... பயன்படுத்தும் ஷாம்பு என்ன?

    சீனாவில் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்தும் பெண்களும் 6 மற்றும் 7 அடி நீளத்திற்கு கூந்தல் வளர்க்கின்றனர், அந்த வகையில் அவர்கள் பயன்படுத்தும் பிரத்யேக ஷாம்பு குறித்து அறிய இதை கிளிக் செய்யுங்க!

  • 19:45 PM

    PF கணக்கில் உள்ள இருப்பை அறிய...

    உங்கள் பிஎஃப் கணக்கின் இருப்பைத் தொடர்ந்து சரிபார்த்துக்கொண்டால், இதுபோன்ற பல கேள்விகளுக்கான பதில்களைப் பெறலாம். PF கணக்கு இருப்பைச் சரிபார்ப்பது மிகவும் எளிதானது. PF இருப்பைச் சரிபார்க்க சில எளிய வழிகளைத் தெரிந்து கொள்வோம்.

  • 19:10 PM

    நீரழிவு நோய்க்கான மூலிகை வைத்தியம்

    சிறுகுறிஞ்சான் அல்லது கோகிலம் என்ற மூலிகை சர்க்கரை நோய்க்கு வரப்பிரசாதமாக உள்ளது. இது சர்க்கரைக்கொல்லி எனவும் அழைக்கப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்த இந்த மூலிகை செடி, தென்னிந்தியா, மத்திய இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் வெப்ப மண்ட காடுகளில் இது அதிகம் காணப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் இது பயன்படுத்தப்படுகிறது என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

     

  • 18:38 PM

    Tamil Nadu News: பாலிடெக்னிக் மாணவர்களுக்கு நல்ல செய்தி!

    இறுதி ஆண்டு முடித்த பாலிடெக்னிக் மாணவர்கள் அரியர்கள் அனைத்தையும் கிளியர் செய்ய சூப்பர் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து அறிந்துகொள்ள இதை கிளிக் செய்யுங்க

     

  • 17:43 PM

    Weight Loss Journey: 50 கிலோ எடையை குறைத்த நபரின் அனுபவம்

    இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் 50 கிலோ உடல் எடையை குறைத்து, அதனை நிலையாக பராமரித்து வருகிறார். அவரின் உடல் எடை குறைப்பு பயணம் மற்றும் அனுபவம் குறித்து படிக்க இதை கிளிக் செய்யவும். 

  • 16:13 PM

    நயன்தாராவின் கதாபாத்திரம் இது தானா?

    Nayanthara in Test: நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

  • 16:02 PM

    IPL 2025 Chennai Super Kings: சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும்?

    ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டர் மற்றும் தோனி எந்த இடத்தில் பேட்டிங் இறங்குவார் என்பதை அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 15:33 PM

    மீனத்தில் வக்ரமாக இருக்கும் புதன்!

    கிரகங்களின் அதிபதியான புதன் மீனத்தில் வக்கிரமாக இருக்கிறார். இது மார்ச் 17 வரை இருக்கும். புதன் தனது இயக்கத்தை மாற்றும்போது, அது பல ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் படிக்க

  • 14:53 PM

    பணத்தை பெருக்குவதற்கான புதிய வழிமுறைகள்

    Wealth Building : பணத்தை பெருக்கி மகிழ்ச்சியாக வாழ என்னென்ன வழிகள் உள்ளன என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • 14:25 PM

    Tamil Nadu Agriculture Budget 2025: வேளாண் பட்ஜெட் மீது விமர்சனம்

    தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தெரிவித்த கருத்துகளை அறிய இதை கிளிக் செய்யவும். 

  • 14:19 PM

    ரோகித் கொடுத்த விளக்கம்

    Rohit Sharma :  போட்டியின் நடுவே பிளேயர்களை திட்டுவது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார். (முழு விவரம்)

  • 14:09 PM

    வெளிநாட்டு அணியில் இணைந்த யுஸ்வேந்திர சாஹல்!

    இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட யுஸ்வேந்திர சாஹல், தற்போது வெளிநாட்டு அணியில் விளையாட தேர்வாகி உள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு விளையாட உள்ளார். மேலும் படிக்க

  • 13:56 PM

    மாதம் ரூ.80,000 வருமானத்தை தரும் பரஸ்பர நிதியம்

    உங்களுக்கு பென்ஷன் இல்லாத நிலையில் வழக்கமான வருமான ஆதாரத்தை உருவாக்க முறையான திட்டமிட்ட முதலீடுகள் உதவும். உங்கள் ஓய்வூதிய வாழ்க்கையை வசதியாக நடத்த உதவும் வகையில், வாழ்நாள் முழுவதும் வருமானத்தை பெறும் வகையில் முதலீடு தேவை.

  • 13:39 PM

    Shukra Udhay 2025: மார்ச் 23ஆம் தேதி உதயமாகும் சுக்கிரன்

    மீனத்தில் இருக்கும் சுக்கிர பகவான் மார்ச் 23ஆம் தேதி உதயமாவதால் இந்த 3 ராசிகளின் வாழ்க்கையே நேர்மறையாக உருமாறும். அவர்கள் குறித்து இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். 

  • 13:30 PM

    தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

    Tamilisai Soundararajan: தமிழக பட்ஜெட் முழுவதும் பாஜக அரசின் திட்டங்களை காப்பியடித்த பட்ஜெட் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். மேலும் படிக்க

  • 12:49 PM

    Tamilnadu Agriculture Budget : விவசாயிகளுக்கான இலவச அறிவிப்புகள் 

    Tamilnadu Agriculture Budget : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட இலவச அறிவிப்புகள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம். (முழு விவரம்)

  • 12:25 PM

    வருண் சக்கரவர்த்தி பரபரப்பு பேச்சு!

    ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பிறகு 2021 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி அறிமுகமானார், அதனை தொடர்ந்து 2021 டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடித்தார். மேலும் படிக்க

  • 11:34 AM

    பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு!

    இந்தி மொழியை எதிர்க்கும் போது, தமிழ் திரைப்படங்களை இந்தியில் ஏன் டப்பிங் செய்ய வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியுள்ளார். மேலும் படிக்க

  • 11:12 AM

    TN Budget LIVE : வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    Tamilnadu Agriculture Budget 2025 LIVE : முக்கிய திட்டங்களை அறிவித்து 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, உரையை நிறைவு செய்தார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

  • 11:08 AM

    TN Budget LIVE : வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    Tamilnadu Agriculture Budget 2025 LIVE :

    - வேளாண் துறைக்கு மொத்தம் ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு

    - இதுவரை 54,000 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. 

    - பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை 10, 346 கோடி தொகையும், வட்டித் தொகையும் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன. 

    - 2025-26-ல், ரூ. 1,427 கோடி தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    - நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது

    - தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ வரும் ஆண்டில் 2338 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்

    - 4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    - புதிதாக 5 விளைபொருளுக்கு புவிசார் குறியீடு பெற ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு! 

    - நல்லூர் வரகு, நத்தம் புளி , காரைக்குடி கொய்யா , கப்பல்கட்டி முருங்கை, வேதாரண்யம் முல்லை ஆகிய 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்

    - வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பெயரில், வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

  • 10:43 AM

    TN Budget LIVE : வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    Tamilnadu Agriculture Budget 2025 LIVE :

    - தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ வரும் ஆண்டில் 2338 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்
    - 4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
    - புதிதாக 5 விளைபொருளுக்கு புவிசார் குறியீடு பெற ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு! 
    - நல்லூர் வரகு, நத்தம் புளி , காரைக்குடி கொய்யா , கப்பல்கட்டி முருங்கை, வேதாரண்யம் முல்லை ஆகிய 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்
    - வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பெயரில், வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
    - உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி.. வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!
    - தமிழ்நாட்டில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் 2030, 2050 ஆண்டுகளில் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் கணிக்கப்பட்டுள்ளன.
    - அதிக லாபம் தரும் மாற்றுப் பயிர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சிக்கென ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு. 
    - உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில், உள்ளுர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
    - கருவேல மரங்களை அகற்றி மிளகாய் விவசாயம் செய்ய நடவடிக்கை!
    - 50 உழவர் சந்தைகள் தேர்வு செய்யப்பட்டு 10 கோடியில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும். 
    - வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் வேளாண் விளை பொருட்கள் விறப்னை செய்யப்படும்.
    - உழவர்களுக்கு 10 லட்சம் வரை முதலீட்டு கடன் வழங்கப்படும்
    - அனைத்து வேளாண் பணிகளையும் இயந்திரம் ஆக்கும் நோக்கில், ரூ. 3 கோடியில் இது குறித்து உழவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படும். 
     - 300 கிராம இளைஞர்களுக்கு மன் அள்ளும் இயந்திரம் மற்றும் வேளாண் இயந்திரங்கள் தொடர்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
    - வேளாண் வணிகத்துறை மூலம் 100 மதிப்பு கூட்டு அலகு அமைக்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 
    - 56 ஒழுங்குறை விற்பனை கூடங்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் இணைக்கப்படும்
    - இ-வாடகை செயலியில் வேளாண் இயந்திரங்கள்..!
    - தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும்

  • 10:41 AM

    சனி பகவான் அருளால் அதிர்ஷ்டத்தை பெறும் 5 ராசிகள்

    சனிப்பெயர்ச்சி 2025: பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். அதன் பிறகு, ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி, அஸ்தம நிலையில் இருக்கும் சனி பகவான், மீன ராசியில் உதயமாவார்.சனிபகவான் மீன ராசியில் உதயமாவது, சில ராசிகளின் வாழ்க்கையை மாற்றும் என்றும், அவர்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும், தொட்டது துலங்கும் என்றும் ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். அதிர்ஷ்ட பலன்களை அள்ளப் போகும் ஐந்து ராசிகளை அறிந்து கொள்வோம்.

     

  • 10:34 AM

    TN Budget LIVE : வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    Tamilnadu Agriculture Budget 2025 LIVE : 

    - மின்சாரம் இணைப்பு இல்லாத உழவர்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்க ரூ. 24 கோடி ஒதுக்கீடு. 
    - மின் மேட்டார் பம்பு செட்டுகள் அமைக்க மானியம் வழங்க ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு
    - 500 ஏக்கரில் வெண்ணெய் பழம் சாகுபடி ஊக்குவிக்கப்படும்
    - 30 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது
    - 5,000 வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள், இ-வாடகை செயலி மூலம் வழங்கப்படும்.
    - உழவர்கள் குறைந்த வாடகையில் இயந்திரம் பெற, ரூ. 17  கோடியில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்படும்
    - பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கீடு. 
    - பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதிய பலா சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு
    - 9 லட்சம் குடும்பங்களுக்கு எலுமிச்சை, கொய்யா செடி தொகுப்பு
    - இந்திய அளவில் முந்திரி ஏற்றுமதியில் தமிழ்நாடு 2ம் இடம். 
    - இதனை ஊக்குவிக்க, ரூ. 10 கோடியில் உழவர்கள் மேம்பட முந்திரி வாரியம் அமைக்கப்படும்
    - 2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 
    - விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்
    - 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்
    - ஊரக பகுதிகளில் காளான் உற்பத்தி நிலையம்
    - மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும். 
    - ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு

  • 10:33 AM

    தோழி விடுதி ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

    Thozhi Hostel : தமிழ்நாடு அரசின் தோழி விடுகளில் தங்க ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 10:31 AM

    TN Budget LIVE : வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    Tamilnadu Agriculture Budget 2025 LIVE : 

    - பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க, ரூ. 2.40 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். 

    - வெங்காயத்தை சேமித்து வைத்து விற்பனை செய்ய கிடங்கு அமைக்க மானியம் வழங்க ரூ. 18 கோடி ஒதுக்கீடு

    - உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது - ரூ.6 லட்சம் ஒதுக்கீடு

    - உற்பத்தியை அதிகரித்திட நெல் சிறப்பு தொகுப்பு திட்டம்

    - காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். 

    - பழச் செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.

    - பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். 

    - புரதச்சத்து நிரைந்த காளாண் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளாண் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்

    - ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் என்று புதிய திட்டம் ரூ. 125 கோடியில் செயல்படுத்தப்படும். 

    - நகர்ப்புற, கிராமப்புற மக்களின் ஊட்டச்சத்துகளை பாதுகாக்க 9 லட்சம் குடும்பங்களுக்கு, 75% மானியத்தில் எலுமிச்சை, கொய்யா செடிகளின் தொகுப்பு வழங்கபடும்

    - கரும்புக்கான ஊக்கத் தொகை, ரூ. 215ல் இருந்து ரூ. 349 ஆக உயர்வு. 

    - கரும்பு டன் ஒன்றுக்கு 3500 வழங்கப்படும். இதற்காக ரூ. 297 கோடி ஒதுக்கீடு

    - ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்காக புதிய திட்டம்

  • 10:15 AM

    TN Budget LIVE : வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    Tamilnadu Agriculture Budget 2025 LIVE :  பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, ரூ. 12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

    - தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை விரைவில் வெளியிடப்படும். வேளாண் காடுகளை அமைக்க உழவர்கள் ஊக்குவிக்கபடுவர். 
    - நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு!
    - ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள்.
    - அங்கு செயல்படுத்தப்படும் வேளாண் தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்

  • 10:02 AM

    தர்சன் நடிக்கும் சரண்டர்!

    UPBEAT பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் 'சரண்டர்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. பிக்பாஸ் தர்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் படிக்க

  • 10:00 AM

    தினசரி இரவில் திடீர் முழிப்பு ஏற்படுகிறதா?

    வயதாகும் போது உடலில் ஏற்படும் மாற்றம் மற்றும் சில உடல் நல கோளாறு காரணமாகவும் இரவில் திடீரென்று முழிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் படிக்க

  • 09:50 AM

    TN Budget LIVE : வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    Tamilnadu Agriculture Budget 2025 LIVE : 

    - 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ. 42 கோடி ஒதுக்கீடு
    - கரும்பு உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கு 2ம் இடம்"
    - டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ. 102 கோடி ஒதுக்கீடு. 
    - தரமான விதைகள் வழங்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு. 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ரூ. 24 கோடி மானியம் வழங்கப்படும்
    - மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம்: 63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 22.80 லட்சம் மானியம் வழங்கிடப்படும். இத்திட்டத்துக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு
    - முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். 
    - நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு.
    - இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும்.
    - இறுதி சடங்கு நிதி உதவி ரூ. 2,500ல் இருந்து ரூ. 10,000 உயர்வு
    - 1000 இடங்களில் 'முதலமைச்சர் உழவர் நல சேவை மையம்'
    - முதலமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம், ரூ. 146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். 
    - கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ. 269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது
    - சூரியகாந்தி, ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்ட வித்து பயிர்கள் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக, 2 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ. 108 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
    - இதன் மூலம், 7.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 90 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர்"
    - இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். 
    - தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும். 
    - சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு!
    - ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு கூடுதல் மானியம். 
    - தற்போதுள்ள 40% மானியம் 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும்
    - நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். 
    - அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு. 
    - நம்மாழ்வார் விருது திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்
    - 1 லட்சம் ஏக்கரில், ரூ. 12 கோடியில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும்.
    - ரூ. 15 கோடியில், 7  அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். 
    - உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கொள்முதல்

  • 09:47 AM

    TN Budget LIVE : வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    Tamilnadu Agriculture Budget 2025 LIVE : 30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் ரூ. 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  • 09:46 AM

    TN Budget LIVE : வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    Tamilnadu Agriculture Budget 2025 LIVE : 2021-24 வரை, 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  • 09:46 AM

    TN Budget LIVE : வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    Tamilnadu Agriculture Budget 2025 LIVE : வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி  உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  • 09:43 AM

    TN Budget LIVE : வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    Tamilnadu Agriculture Budget 2025 LIVE : கடந்த 4 ஆண்டுகளில், மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு, 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி. 1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ் ரூ. 510 கோடி செலவில் மானிய விலையில் இயந்திரம் வழங்ப்பட்டுள்ளன - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்  

  • 09:42 AM

    TN Budget LIVE : வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    Tamilnadu Agriculture Budget 2025 LIVE : பொருளதாரத்தில் தமிழ்நாடு 2வது இடம் என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்

  • 09:41 AM

    TN Budget LIVE : வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    Tamilnadu Agriculture Budget 2025 LIVE : விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் 2025 தயாரிப்பு. உழவர்களின் வாழ்வில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்பிகிறேன் - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

  • 09:40 AM

    TN Budget LIVE : வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    Tamilnadu Agriculture Budget 2025 LIVE : வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பு! 

  • 09:39 AM

    TN Budget LIVE : வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    Tamilnadu Agriculture Budget 2025 LIVE : வேளாண் பட்ஜெட் தாக்கல் தொடங்கியது

  • 09:34 AM

    உடல் எடையை படிப்படியாக சீராக குறைக்க

    உடல் எடையை குறைக்க கடுமையான டயட், அல்லது ஜிம் பயிற்சி தேவை என்று பலர் தவறாக நினைக்கின்றனர். வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்தாலே, உடல் எடையை படிப்படியாக சீராக குறைக்கலாம். இந்நிலையில், உடல் எடை குறைய, தொப்பை கரைய காலை முதல் இரவு வரை கடைப்பிடிக்க வேண்டிய சில எளிய பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.

  • 09:17 AM

    கொலஸ்ட்ரால் அதிகரித்துவிட்டதா?

    Cholesterol : இரத்த நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்துவிட்டால், இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிடத் தொடங்குங்கள். கொலஸ்ட்ரால் கரைந்து, இதயம் ஆரோக்கியமாக இருக்கும். (முழு விவரம்)

  • 09:15 AM

    அண்ணாமலை எச்சரிக்கை

    Annamalai : கர்நாடக துணை முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு வரவே கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டாயம் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். (முழு விவரம்)

  • 09:07 AM

    தமிழக அரசு வழங்கும் ரூ. 2000 உதவித்தொகை!

    தமிழ்நாட்டில் தாய் மற்றும் தந்தையை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உதவும் வகையில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 09:03 AM

    ஐபிஎல்லில் விளையாடுவது சந்தேகம்?

    Jasprit Bumrah To Miss IPL 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் 2025ல் விளையாடமாட்டார் என்று செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

     

     

  • 08:03 AM

    கிசான் கிரெடிட் கார்டு திட்டம்: 

    Kisan Credit Card Scheme : விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தியிருக்கும் கிசான் கிரெடிட் கார்டு பெறுவதற்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் நடைமுறை என்பது உள்ளிட்ட முழு தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 08:02 AM

    நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி? 

    Diabetes : நீரிழிவு நோய் உங்களுக்கு வராமல் இருக்க வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 08:01 AM

    இன்றைய ராசிபலன் 

    Rasipalan : இன்றைய ராசிபலன் மார்ச் 15  சனிக்கிழமை 5 ராசிகளுக்கு இன்றைய நாளில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. (முழு விவரம்)

Trending News