Tamilnadu LIVE News Updates Today: உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 16) தாக்கல் செய்ய உள்ளார்.
தற்போது கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார், நீதிபதி கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் வழக்கை விசாரிக்க உள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன் இன்று போராட்டங்களை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.










