LIVE : அதிமுக - பாஜக கூட்டணி, அண்ணாமலைக்கு பதிலடி, திமுக முக்கிய அறிவிப்பு - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளனர். தொகுதி மறுசீரமைப்பை கருதிதல் கொண்டு திமுக மாநிலம் தழுவிய போராட்டம் அறிவித்துள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்..

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 8, 2025, 09:05 PM IST
    Tamil Nadu LIVE : தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Live Blog

Tamilnadu LIVE TODAY : பாஜக கூட்டணிக்காக பல கட்சிகள் இன்று ஏங்கிக் கொண்டிருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், அதிமுக ஒன்றும் யார் கூட்டணிக்கும் ஏங்கவில்லை என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். ஆனால், பாஜகவுடன் கூட்டணியில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இம்முறை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து யூகங்கள் எழத் தொடங்கியுள்ளன. அதேநேரத்தில் மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்வது குறித்து திமுக வரும் 12 ஆம் தேதி போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதவிர இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....

8 March, 2025

  • 21:05 PM

    நோயற்ற வாழ்வைப் பெற... தினம் ஊற வைத்த 5 பாதாம்... 

    பாதாம் என்னும் உலர் பழம் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இதனை ஊறவைத்து சாப்பிடுவதால் ஊட்டச்சத்தின் பலன்களை முழுமையாக பெறலாம். ஏனென்றால் இதன் மூலம், பாதாம் பருப்பு எளிதில் ஜீரணம் ஆவதோடு, ஊட்டச்சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ளுவது எளிதாகிறது.

  • 20:55 PM

    நோயற்ற வாழ்விற்கு வாரம் 2 முறையாவது சுரைக்காய் சாப்பிடுங்க

    சுரைக்காய் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். ஆனால் பாகற்காய்க்கு அடுத்தபடியாக பலர் விரும்பாத காய்கறிகளில், சுரைக்காய் ஒன்று. ஆனால் இதில் பொதிந்துள்ள ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொண்டால், இதனை வாரத்துக்கு இருமுறையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் மனதில் ஏற்படும்.

  • 20:38 PM

    NPS பணத்தை டி-ரெமிட் மூலம் எளிதாக மாற்றலாம்

    தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) இணைந்துள்ளீர்களா? வேலை அல்லது நகர மாற்றம் காரணமாக உங்கள் NPS நிதியை மாற்றுவதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா? ஆனால், இப்போது டென்ஷன் ஆக வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் உங்கள் பணத்தை டி-ரெமிட் மூலம் எளிதாக மாற்றலாம்! 

  • 19:14 PM

    அஜித்தின் 'குட் பேட் அக்லி'.. புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்! 

    Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். (முழு விவரம்)

  • 19:10 PM

    நுரையீரலை இயற்கையாக சுத்தம் செய்ய உதவும்... சில சூப்பர் உணவுகள்

    சுவாசத்திற்கு ஆதாரமான நுரையீரலை, ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக முக்கியம். நுரையீரல் தீவிரமாக பாதிக்கப்படும் போது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உருவாகும். எனவே நுரையீரலை வலுப்படுத்த அதில் சேரும் அழுக்குகளையும் நச்சுக்களையும் அவ்வப்போது நீக்க வேண்டும்.

     

  • 17:40 PM

    Diabetes Control Tips: சுகர் நோயாளிகளுக்கு டிப்ஸ்

    இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.

  • 17:40 PM

    அதிக வட்டி விகிதம் கொண்ட சில சிறப்பு FD திட்டங்கள்

    ரிஸ்க் இல்லாமல் நிலையான வருமானத்தை பெற உதவும் திட்டங்களில் வங்கியின் நிலையான வைப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமானவை இன்று  5 சிறப்பு FD திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கடைசி வாய்ப்பு 31 மார்ச் 2025 வரை தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

  • 16:37 PM

    Health Benefits of Lemon: முழு லிஸ்ட் இதோ

    எலுமிச்சையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் அதிகமாக உள்ளன. இதன் மூலம் உடலுக்கு 7 அற்புதமான நன்மைகள் கிடைக்கின்றன. எலுமிச்சையின் பயன்பாட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 16:26 PM

    IPL 2025: ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளின் பிளேயிங் XI என்ன? 

    IPL 2025 Playing XI: ஐபிஎல் 2025 தொடரில் இருக்கும் 10 அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் XI என்ன என்பதை பார்க்கலாம். (முழு விவரம்)

  • 15:50 PM

    ind vs nz Final: இந்த அணிதான் கோப்பையை வெல்லும்.. அடித்து சொல்லும் ரவி சாஸ்திரி

    Champions Trophy Final: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை (மார்ச் 09) மோதுகின்றன. (மேலும் படிக்க)

  • 15:40 PM

    Additional Pension: கூடுதல் ஓய்வூதியம் முக்கிய அப்டேட்

    வயது வாரியாக 80 வயதிற்கு பிறகு யாருக்கு எவ்வளவு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்? இது குறித்த முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

     

  • 15:10 PM

    சாம்சங் கேலக்ஸி S23... 56% தள்ளுபடி வழங்கும் Flipkart

    பிளிப்கார்ட் நிறுவனம் ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு நலல் செய்தி. சாம்சங்கின் பிரீமியம் ஸ்மார்ட்போனான Samsung Galaxy S23 256GB போனை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.

  • 14:58 PM

    வயிற்றுப் புண் முக்கிய அறிகுறிகள்..!

    Stomach Ulcer : வயிற்றுப் புண் அறிகுறிகள் மற்றும் அவற்றை சரி செய்வது எப்படி என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 14:44 PM

    CGHS Latest News: ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்

    வழிகாட்டுதல்களில் முக்கிய மாற்றங்கள். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கூறியது என்ன? முழு விவரம் இதோ.

  • 14:30 PM

    தினம் ஒரு கைப்பிடி முளைகட்டிய கொண்டைக்கடலை

    கொண்டைக்கடலை அல்லது கொத்துக்கடலை புரதச்சத்தின் சிறந்த ஆதாரம். பயறு வகை தானியங்களில் கொண்டைக்கடலையை சூப்பர் ஃபுட் என அழைக்கலாம். அதிலும் முளைகட்டிய கொண்டைக்கடலை ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம்.

  • 13:47 PM

    வார ராசிபலன் மார்ச் 10 முதல் 16 வரை: அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிக்காரர்கள்.. என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்?

    Weekly Horoscope March 10th To 16th: கிரகப்பலன்களின் படி 12 ராசிக்காரர்களுக்கும் அந்த நாள் அல்லது அந்த வாரம் அமையும். அப்படி இந்த வாரம் உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்கும் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம். (முழு விவரம்)

  • 13:39 PM

    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முரசொலி பதிலடி

    RN Ravi : ஆரியர்கள் வந்தேறிகள் என பெரியார் திணிக்க முயற்சி செய்தார் என தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் பேசிய நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பதிலடி கொடுத்திருக்கிறது. (முழு விவரம்)

  • 13:38 PM

    மானிய விலை சிலிண்டர்..!

    LPG cylinder : மானிய  விலையில் சிலிண்டர் வாங்குபவர்கள் உடனே ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்ற முக்கிய அறிவிப்பு அரசிடமிருந்து வெளியாகியுள்ளது.(முழு விவரம்)

  • 13:25 PM

    7th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்?

    அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? அறிவிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்டை இங்கே காணலாம்.

  • 13:18 PM

    Best Retirement Scheme: சிறந்த முதலீட்டு திட்டம், மிஸ் பண்ணிடாதீங்க

    பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், ஓய்வு பெற்ற பிறகு மாதத்திற்கு ரூ.60,000 வழக்கமான வருமானத்தை ஈட்ட முடியும். பிபிஎஃப் மூலம் மாதம் ரூ.60,000 ஈட்டுவதற்கான வழியை இங்கே காணலாம்.

     

  • 11:32 AM

    ரூ.66000 உதவித் தொகை - பெறுவது எப்படி?

    Tamil Nadu government : 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சியுடன் ரூ.66000 உதவித் தொகை வழங்குகிறது.(முழு விவரம்)

  • 11:11 AM

    Minimum Monthly Pension Hike: அதிகரிக்கிறது ஓய்வூதியம்!!

    தனியார் துறை ஊழியர்களுக்கு இன்னும் சில நாட்களில் கிடைக்கவுள்ள சில முக்கிய அறிவிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 10:47 AM

    Tamil Nadu Government News | ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்

    Pensioners News In Tamil: ஓய்வூதியதாரர்கள் பயன்பெறக்கூடிய வகையில், ஓய்வூதியதாரர்களுக்கு இரண்டு முக்கியமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. (முழு விவரம்)

  • 10:33 AM

    EPFO ​​3.0: மாறும் விதிகள்... கூடும் வசதிகள்...

    ஊழியர்கள் நலன் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அவ்வப்போது EPFO விதிகளில் மாற்றங்களை கொண்டு வரும். அந்த வகையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் EPFO ​​3.0  விதிகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது

  • 10:30 AM

    ஏழரை நாட்டுச் சனியில் சிக்கும் ராசிகளும்... சில எளிய பரிகாரங்களும்

    சனியைப் போல கெடுப்பாறும் இல்லை கொடுப்பாரும் இல்லை என்று கூறுவார்கள். அந்த வகையில் சனிபகவானை திருப்தி படுத்த செய்யும் பரிகாரங்கள் மூலம், அவரது மனதை குளிர்வித்து, அவரது அருளை பரிபூரணமாக பெற்று கெடு பலன்களில் இருந்து தப்பிக்கலாம்.

  • 10:16 AM

    Diabetes Control Tips: சுகர் நோயாளியா நீங்கள்?

    சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் 5 ஆரோக்கியமான ஆயுர்வேத பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 10:13 AM

    Unified Pension Scheme: புதிய ஓய்வூதியத் திட்டம்

    மத்திய அரசு சமீபத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தது. ஏப்ரல் 1 முதல் இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரவுள்ளது. அதன் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.

  • 09:59 AM

    TNPSC : தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

    டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிப்பவர்களுக்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு ஒரு குட் நியூஸ் வெளியிட்டுள்ளது. அது என்ன என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 09:30 AM

    நோயற்ற வாழ்விற்கு... தினம் ஒரு ஸ்பூன் ஆளி விதை போதும்

    தினமும் ஆளி விதை சாப்பிடுவதால் உச்சி முதல் பாதம் வரை பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். தோற்றத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும், அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பெரியவை. எனவே இதனை சூப்பர் ஃபுட் என்று அழைப்பதில் தவறேதும் இல்லை.

     

  • 09:13 AM

     தர்பூசணி பழம் நன்மைகள்..! 

    Watermelon : தர்பூசணி பழத்தை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..(முழு விவரம்)

  • 09:13 AM

    ரூ.8 லட்சம் சம்பாதிப்பது எப்படி?

    Post Office : நீங்கள் மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு 8 லட்சம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • 09:11 AM

    கோடை கால டிப்ஸ்

    Electricity Bill : கோடைகாலத்தில் மின்சார பில்லை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தினால் மின் கட்டண பில் அதிகம் வருவதில் இருந்து தப்பிக்கலாம். அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (மேலும் படிக்க )

  • 09:10 AM

    இன்றைய ராசிபலன் மார்ச் 8 சனிக்கிழமை

    இன்றைய ராசிபலன் மார்ச் 8 சனிக்கிழமை மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள்...(மேலும் படிக்க )

  • 08:38 AM

    Sani Peyarchi 2025: உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?

    மார்ச் 29 சனி பெயர்ச்சி நிகழவுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வு இது. இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Trending News