Tamilnadu Live Today Updates : திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மூன்றாவது மொழி என்ற பெயரில் இந்திமொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும், அதனை நேரடியாக கூறாமல் மூன்றாவது மொழி என பசப்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தி மொழி திணிப்பை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ளார். இந்த சூழலில் சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பு வகிக்கும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. இதுதவிர இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...










