Tamilndu LIVE Today : 9 மாதங்களுக்குப் பிறகு விண்வெளியில் இருந்து பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ், அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஒருநாள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ விடுப்பில் இருப்பவர்களை தவிர மற்ற அனைவரும் பணிக்கு கட்டாயம் வந்தாக வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகள்.










