Tamilnadu LIVE Today : தமிழ்நாடு பட்ஜெட் நாளை காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பல முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுக நேற்று மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியது. திருவள்ளூரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் மொழியை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வோம் என எச்சரித்தார். தமிழ்நாட்டுக்கான நிதியை கொடுக்க மறுப்பது ஏன், தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா? என பிரதமர் மோடிக்கு ஆவேசமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மும்மொழிக் கொள்கை குறித்து பேசிய அண்ணாமலைக்கு கரூரில் நடைபெற்ற திமுக போராட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி காரசாரமான பதிலடி கொடுத்தார். அதேபோல் மதுரையில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். இதுதவிர இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....