Tamilnadu LIVE Today : ஆளுநர் ஆர்.என். ரவி கல்லூரி மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் முழக்கம் எழுப்ப வைத்ததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசியலமைப்பு சட்ட உறுதிமொழிகளை அவர் மீறும் வகையில் செயல்பட்டிருப்பதால், ஆளுநர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் பலர் வலியுறுத்தியுள்ளனர். அதிமுகவில் மூத்த நிர்வாகிகள் சிலர் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் சிலர் மாற்றுக் கட்சிகளுக்கு செல்வது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜக 40 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு புதிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 245 ரன்கள் இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸிங் செய்து சரித்திரம் படைத்தது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும், இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் விளையாட உள்ளன. இதுதவிர இன்றைய நாளின் முக்கிய அப்டேட்டுகளை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்...










