Tamilnadu LIVE TODAY : கச்சத்தீவை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இன்று நிறைவேறியது. தீர்மானத்தில் கட்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டிக்கெட்விற்பனை இன்று, நீலகிரியில் இ-பாஸ் கட்டாயம், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் நடைபெறுகிறது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.....










