Tamilnadu Live, Jallikattu Updates | உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை துணை முதலைமச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மகனுடன் சென்று ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டுகளிக்கிறார். அதேநேரத்தில் அமைச்சர் மூர்த்தி மீது சாதி ரீதியாக பாகுபாடு காட்டுவதாக பறையர் சமூக மக்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர். அது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி பதிலளிக்க மறுத்துவிட்டார். இதுதவிர, சென்னை ஐஐடி வளாகத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, காணும் பொங்கலையொட்டி சென்னை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் குவிய தொடங்கியுள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.










