Tamilnadu LIVE Today: தமிழ் புத்தாண்டான (விசுவாசுவ வருடம்) இன்று சித்திரை முதல் நாளாகும். அரசு விடுமுறை நாளான இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள், வங்கிகள் செயல்பாட்டில் இருக்காது. நீண்ட விடுமுறை நாள்கள் இன்றுடன் முடிவடைகிறது, 10ஆம் வகுப்பு தேர்வுகளும் நாளையுடன் நிறைவடைய இருக்கிறது.
தொடர்ந்து, தமிழகத்தில் கிழக்கு கடற்கரை வங்கக்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. ஏப். 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாள்கள் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன் வளத்தை பாதுகாக்க ஆண்டுதோறும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் நேற்று மாலை போட்டியில் ராஜஸ்தான் அணி ஆர்சிபி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்த நிலையில், பரபரப்பான இரவு போட்டியில் டெல்லி அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இன்று (ஏப். 14) நடைபெறும் 30வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானமத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.










