Tamilnadu Live News Today | அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் விளக்கம் அளித்துள்ளார். என்னை சோதிக்காதீர்கள் என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிப்பவன் நான் என்றும் கூறியுள்ளார். அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அமைதியாக இருந்தவன் என செங்கோட்டையன் பேசியுள்ளார். மத்திய அரசின் புதிய வருமானவரி மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு. மகள் பவதாரணி பெயரில் புதிய ஆர்கெஸ்ட்ரா தொடங்கப்படும் என இளையராஜா அறிவித்துள்ளார் என்பது உள்ளிட்ட இன்னறைய நாளின் முக்கிய செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....










