Live Now

Tamil Nadu Breaking News LIVE: டெல்லியில் நயினார் நாகேந்திரன்.. கர்நாடகா முதல்வராக பதவியேற்கும் டி.கே.சிவக்குமார் - இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE Updates Today: அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகிய நிலையில், டெல்லிக்கு சென்றுள்ளார் நயினார் நாகேந்திரன். இன்று கர்நாடக முதல்வராக பதவியேற்கிறார் டி.கே. சிவக்குமார். இது போன்ற இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் நியூஸுடன் இணைந்திருங்கள்.

Tamil Nadu Breaking News LIVE: டெல்லியில் நயினார் நாகேந்திரன்.. கர்நாடகா முதல்வராக பதவியேற்கும் டி.கே.சிவக்குமார் - இன்றைய முக்கிய செய்திகள்!
Image Credit: Image Source: X
03 June 2026 05:39 PM (IST)

ரோட்ல செருப்பால அடிக்கணும்.. செய்தியாளர் சந்திப்பில் கொந்தளித்த அலிஷா

"டிஆர்பி-க்காக இவ்வளவு கேவலமாவா பேசுவீங்க? சும்மா விடமாட்டேன்!" - பச்சிளம் குழந்தையை அவதூறில் இழுத்த திருச்சி சூர்யா மற்றும் முக்தார் மீது கமிஷனர் அலுவலகத்தில் அலிஷா கண்ணீருடன் அதிரடி புகார்.. (மேலும் படிக்க)

03 June 2026 04:34 PM (IST)

Plastic Currency Notes: RBI அடுத்த மாஸ்டர் பிளான்

தற்போது பயன்படுத்தப்படும் காகித நோட்டுகளுடன் ஒப்பிடும்போது, பிளாஸ்டிக் நோட்டுகளின் உற்பத்திச் செலவு குறைவாகவே இருக்கும். மேலும், பாலிமர் அடிப்படையிலான நோட்டுகளை வழங்கும் வகையில் தானியங்கி பண இயந்திரங்கள் (ஏடிஎம்கள்) செயல்படுத்தப்படும்... (மேலும் படிக்க)

 

03 June 2026 03:52 PM (IST)

தமிழக மழை நிலவரம்: கன்னியாகுமரிக்கு 6 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்

Tamil Nadu Weather Update: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை ஒட்டி, தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு நிலவப்போகும் வானிலை மாற்றம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கான மிக கனமழை எச்சரிக்கை, சென்னை வெயில் நிலவரம் மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஆகியவற்றைத் தாங்கிய முழுமையான தொகுப்பு... (மேலும் படிக்க)

03 June 2026 03:16 PM (IST)

அண்ணாமலையின் புதிய கட்சி யூகங்களும் தமிழ் தேசிய விவாதமும்!

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் தனித்துவமான நகர்வுகள், கோவை போஸ்டர் அரசியல் மற்றும் திராவிட அரசியலுக்கு மாற்றாக எழும் 'தமிழ் தேசியம்' குறித்த விவாதங்களின் பின்னணியில் அலசும் ஒரு அரசியல் பார்வை.. (மேலும் படிக்க)

03 June 2026 01:11 PM (IST)

Delhi Fire Accident Latest News : டெல்லி தீ விபத்து - 20 பேர் பலி

டெல்லி மால்வியா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. (மேலும் படிக்க)

03 June 2026 01:01 PM (IST)

அமித் ஷா அண்ணாமலைக்கு பச்சை கொடி! 

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து அறிவித்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் பாஜக தலைமை அவரை கட்சியில் தக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஜூன் 2ம் தேதி டெல்லியில் நடைபெற்ற முக்கிய சந்திப்புகளுக்குப் பிறகு, அமித் ஷா அவரது முடிவுக்கு 'பச்சைக்கொடி' காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

03 June 2026 12:33 PM (IST)

கேரளக் குழந்தையைக் கொன்ற அஷ்கரின் பகீர் வாக்குமூலம்

தாயின் காதலனால் கொடூரமான முறையில் அடித்துத் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித்தின் மரணம் குறித்த விரிவான பின்னணி, பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள் மற்றும் குற்றவாளிகளின் வாக்குமூலம் அடங்கிய முழுத்தகவல்.. (மேலும் படிக்க)

03 June 2026 11:56 AM (IST)

புதுச்சேரியில நாங்க தோற்க திமுக தான் காரணம்

தமிழக முதல்வர் விஜய் குறித்தும், புதுச்சேரி கூட்டணி விரிசல் குறித்தும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி உடைத்த உண்மைகள்... (மேலும் படிக்க)

03 June 2026 10:59 AM (IST)

ஜூன் 03 தங்கம் விலை! 

தேதி 24 கேரட் தங்கம் விலை 22 கேரட் தங்கம் விலை 18 கேரட் தங்கம் விலை
ஜூன் 03, 2026 ரூ. 15,818 ரூ. 14,500 ரூ. 12,180

 

03 June 2026 10:53 AM (IST)

தமிழகத்தின் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ஜூன் 4-ல் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஜூன் 8 வரை பரவலாக கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)

03 June 2026 10:26 AM (IST)

Annamalai Birthday Posters: ரஜினி, அஜித் ரசிகர்களை குறிவைக்கிறாரா அண்ணாமலை?

பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ஆகியோரின் ரசிகர்களை குறிவைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.... (மேலும் படிக்க)

03 June 2026 10:16 AM (IST)

டெல்லியில் நயினார் நாகேந்திரன்.. அண்ணாமலைக்கு அமித் ஷா கொடுக்கும் ஆஃபர்!

பாஜக தேசியத் தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தியால் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனிக்கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ள சூழலில், அவரைத் தக்கவைக்க தேசிய அளவில் முக்கிய பொறுப்பை வழங்க அமித் ஷா பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க) 

Add Zee News as a Preferred Source

About the Author