Tamil Nadu Breaking News Today: மும்மொழி கொள்கை, புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியிருந்தார். புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை தமிழ்நாடு இழப்பதாக தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.
இதற்கு, முதல்வர் ஸ்டாலின் கடலூரில் விழா ஒன்றில் பேசியபோது பதிலடி கொடுத்துள்ளார். கல்வியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய அமைச்சர் கூறும் நிலையில், நிதியை அனுப்ப மாட்டோம் என்று சொல்வது அரசியலா? அல்லது கோரிக்கை வைப்பது அரசியலா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு அரசு vs மத்திய அரசு என புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
தொடர்ந்து, நேற்று திரையரங்குகளில் வெளியான டிராகன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு திரைப்படங்களின் முதல் நாள் வசூல் விவரம், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து போட்டியின் அப்டேட்கள், நாளை நடைபெறும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் அப்டேட்கள் ஆகிய முக்கிய செய்திகளின் அப்டேட்களை இங்கு உடனுக்குடன் காணலாம்.










