LIVE: த.வெ.க 2ஆம் ஆண்டு தொடக்க விழா! ஓரு ஆண்டில் 2 பொது தேர்வுகள்? பட்ஜெட்டில் வரும் அறிவிப்புகள் - இன்றைய முக்கிய செய்தி!

Tamil Nadu News Today: ஒரு ஆண்டில் 2 பொது தேர்வுகளா? அச்சத்தில் மாணவர்கள்!  

Written by - RK Spark | Last Updated : Feb 26, 2025, 09:00 PM IST
    Tamil Nadu News Today: இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Live Blog

Tamil Nadu News Today: ஓராண்டில் 2 பொதுத்தேர்வுகள்? புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் அடுத்த கல்வியாண்டு முதல் 10ம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு

26 February, 2025

  • 20:58 PM

    கொழுப்பு கல்லீரல் பிரச்சனையா

    இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பலருக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருப்பதை பார்க்கலாம். கொழுப்பு கல்லீரல் பிரச்சனை தீர, கல்லீரல் நச்சுக்களையும் கொழுப்புகளையும் வெளியேற்றும் ஆற்றல் கொண்ட உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும்.

  • 20:40 PM

    தினம் ஒரு கப் மாதுளை

    Pomegranate Benefits: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகக் கருதப்படும் மாதுளையை தினமும்... அதிகம் அல்ல ஒரு கப் சாப்பிட்டு வந்தாலே போதும், உடலை எல்லா வகையிலும் பிட்டாக வைத்துக் கொள்ளலாம். மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பலவிதமான உடல்நல பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லலாம்

  • 19:37 PM

    ஓய்வு காலத்திற்காக கோடிகளில் நிதியை சேர்க்க உதவும் முதலீட்டு திட்டம்

    நல்ல வருமானத்தை கொடுக்கும் திட்டங்களில் SIP மற்றும் PPF ஆகிய இரு முதலீடுகள் நல்ல தேர்வாக இருக்கும். SIP மற்றும் PPF ஆகிய இரு ஆப்ஷன்களில் ஓய்வூதிய நிதி அதிகம் கிடைக்க உதவும் திட்டம் எது என்பதை இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

     

  • 19:21 PM

    குழுக்களாக வளரும் 7 விலங்குகள்!

     

    குழுக்களாக வளரும் 7 விலங்குகள் மற்றும் அவற்றின் சிறப்பு பண்புகள் பற்றி அறிக. மேலும் படிக்க

  • 18:44 PM

    First Look Of Runner | பாலாஜி முருகதாஸின் ‘ரன்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

    சிலம்பரசன் TR வெளியிட்ட பாலாஜி முருகதாஸின்  ‘ரன்னர் ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - மகாசிவராத்திரி சிறப்பு தினத்தில் ரசிகர்களுக்கு பரிசு (மேலும் படிக்க)

  • 18:29 PM

    Good Bad Ugly Movie House | குட் பேட் அக்லி:  ‘இந்த’ வீட்டை கவனிச்சீங்களா?

    அஜித் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது, குட் பேட் அக்லி. இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது. (மேலும் படிக்க)

  • 18:00 PM

    Vitamin B12 Deficiency: இந்த உணவுகளை உட்கொண்டால் போதும்

    வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் உட்கொள்ள வேண்டிய சில உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

     

  • 17:53 PM

    Viral Video Of Fish Drinking Beer | மீன் பீர் குடிக்கும் வீடியோ!

    ஒரு மீனை ஒரு நபர் பீர் குடிக்க வைத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • 17:15 PM

    Weight Loss Tips: ஆயுர்வேதம் சொல்லும் அட்டகாசமான டிப்ஸ்

    உடல் எடையை குறைக்க ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில எளிய, இயற்கையான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 17:05 PM

    How To Identify If An Egg Is Rotten Or Not | முட்டை அழுதியதா இல்லையா என எப்படி பிடிப்பது?

    உடலுக்கு புரதம் கிடைக்க பலர், முட்டையை எடுத்துக்கொள்வதுண்டு. ஆனால், பல சமயங்களில் இவற்றை திறந்த பார்த்த பின்புதான் இவை அழுகி விட்டதா இல்லையா என்பதே தெரியும். (மேலும் படிக்க)

  • 16:19 PM

    EPS Pension Calculator: மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

    ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பான ஓய்வூதிய வருமானத்தை வழங்கும் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 15:30 PM

    இல்லறம் நல்லறமாக இருக்க...

    மனதளவில் நீங்கள் கல்யாணத்துக்கு தயாராகி விட்டீர்களா. அந்த வகையில் சரியான வாழ்க்கை  துணையை தேர்ந்தெடுக்க நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.

  • 15:24 PM

    Kisan Credit Card: கிசான் கிரெடிட் கார்டு என்றால் என்ன?

    கிசான் கிரெடிட் கார்டு விவசாயிகளுக்கான முக்கியமான ஒரு திட்டமாகும். இந்த திட்டம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 15:16 PM

    Shalini Acted In Good Bad Ugly Movie | குட் பேட் அக்லி படத்தில் நடித்த ஷாலினி?

    அஜித் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம், குட் பேட் அக்லி. இந்த படத்தில் ஷாலினி கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. (மேலும் படிக்க)

  • 14:38 PM

    Indian Arranged Marriage | மாமியார் வீடு குறித்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

    இந்தியாவில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது மிக சுலபமாக நடந்து வருகிறது. இந்த முறையில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், தங்கள் மாமியார் வீடு குறித்து சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். (மேலும் படிக்க)

  • 14:05 PM

    சனி பகவானின் அருள் பார்வையால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்

    சனிப்பெயர்ச்சிக்கு முன்னதாக ஏற்படும் சனி அஸ்தமனம், சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். சனி பகவானின் அருள் பார்வையால், பலனைப் பரப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

     

  • 13:34 PM

    TVK Anniversary Prashant Kishor Speech | தவெக-விற்கு பிரசாந்த் கிஷோரின் அரசியல் வியூகம்..

    தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று மாமல்லபுரத்தில் நடைப்பெற்றது. இதில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், அரசியல் வியூக வடிவமைப்பாளருமான பிரசாந்த் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். (மேலும் படிக்க)

  • 13:33 PM

    ஆதவ் அர்ஜுனா மீண்டும் அதிரடி!

    சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் ஆதவ் அர்ஜுனா மீண்டும் திமுகவை எதிர்த்து பேசி உள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க

  • 13:24 PM

    8th Pay Commission: இந்த முறை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எந்த அளவில் தீர்மானிக்கப்படும்? 

    ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்றால் என்ன? இந்த முறை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எந்த அளவில் தீர்மானிக்கப்படும்? சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? இது குறித்த முழுமையன தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

  • 13:03 PM

    Vijay Speech In TVK First Anniversary | எதிர்பார்த்ததை பேசாத விஜய்! 

    தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று நடந்தது. இதில் முக்கிய விஷயங்கள் என்னென்ன நடந்தது என்பதை குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 12:27 PM

    'கேம் ஆப் த்ரோன்ஸ்' பட நடிகர் ஜெரோம் ஃப்ளின்.

    லைக்கா புரொடக்ஷன்ஸ் - ஆசிர்வாத் சினிமாஸ் கூட்டணியில் தயாரான' L2 : எம்புரான் ' படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின். படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவிப்பு. மேலும் படிக்க

  • 12:10 PM

    TVK Anniversary Aadhav Arjuna Speech | இன்னும் பல பூகம்பங்கள் இருக்கு!'

    பிரசாந்த் கிஷோர் வந்தது திமுகவிற்கு பயம் என்று ஆதவ் அர்ஜுனா பேசினார். மேலும், “சிலர் சினிமாவிற்கு வந்து, அரசியலில் நுழைந்து, உடனே துணை முதல்வர் ஆகிவிடுவர்” என்ரு உதயநிதியையும் அட்டாக் செய்தார்.

  • 12:08 PM

    TVK Anniversary | ஆதவ் அர்ஜுனா பேச்சு:

    விஜய் தலைமையில் அமைந்துள்ள தங்களின் கூட்டணி, ரொம்பவே தெளிவாக இருப்பதாக மேடையில் பேசியிருக்கிறார். போலி கபடதாரிகள் என இன்றைய ஆளும் கட்சியை சொன்ன ஆதவ் அர்ஜுனா, ஆளும் கட்சியின் கொள்கை தோல்விகள் குறித்தும் பேசினார்.

  • 12:04 PM

    Universal Pension Scheme: புதிய ஓய்வூதியத் திட்டம்

    புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஓய்வூதியப் பலன் கிடைக்கும். இந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 11:50 AM

    உடலை சல்லடையாக்கும் குளிர்பானங்கள்

    செயற்கைப் பழச்சாறுகள், சோடா பானங்கள், கோக் பெப்சி போன்ற கார்பனேட்டட் பானங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிப்பவை. இவற்றில் இருப்பதெல்லாம் சர்க்கரை மட்டுமே. ஊட்டச்சத்துக்கள் என்பது மருந்துக்கும் இல்லை. கூடுதலாக இதில் சேர்க்கப்படும் ரசாயனங்கள், உங்கள் உடலை சல்லடையாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குளிர்பானங்களை வழக்கமாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி, பிரபல டயட்டீஷியன் ஆயுஷி யாதவ் கூறும் கருத்துக்களை இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம். 

  • 11:36 AM

    தமிழக வெற்றிக் கழகம்....

    கட்சி தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி சென்னையில் பிரமாண்ட விழா நிர்வாகிகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க

  • 11:12 AM

    இதை செய்தால் சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்!

    சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இரவு உணவிற்குப் பிறகு பின்வரும் முயற்சிகளை செய்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மேலும் படிக்க

  • 11:10 AM

    Photos Of TVK 2nd Year Anniversary | பிரம்மாண்டமாக நடந்த தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா!

    தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. மாமல்லபுரத்தில் நடந்த இந்த விழாவில் கட்சி உறுப்பினர்கள், பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடந்த ருசிகர விஷயங்களை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 11:07 AM

    Kidney Damage Symptoms: இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்!!

    சிறுநீரக பாதிப்பால் ஏற்படும் வலி மற்றும் அசவுகரியங்களை மக்கள் பொதுவாக சிறிய வலி என கருதி புறக்கணிக்கிறார்கள். ஆனால், இது தவறு. இதனால் மருத்துவரை சரியான நேரத்தில் அணுக முடியாமல் போகின்றது. சிறுநீரக பாதிப்பின் சில அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 10:27 AM

    TVK 2nd Year Anniversary | காணொலி ஒளிபரப்பு!

    விஜய், நடிகராக இதுவரை செய்த நற்பணிகள், சமூக நல உதவிகள் காணொலி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. இதில், அவர் சமூக நலப்பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்ததும் இடம் பெற்றுள்ளது. 

  • 10:25 AM

    ரூ.15,000 முதலீட்டை ரூ. 8 கோடியாக மாற்றலாம்

    SIP Investment: ஆயிரங்களை கோடிகளாக்க  தேவையானது சரியான திட்டமிடல் மட்டுமே. வழக்கமான வங்கி RD முதலீட்டை விட, பரஸ்பர நிதியங்களில் மாதம்தோறும் செய்யப்படும் SIP முதலீடுகள் வியக்கத்தக்க வகையில் வருமானத்தை அள்ளிக் கொடுக்கின்றன. இதற்கு காரணம் அதில் கிடைக்கும் நல்ல ரிட்டன்களும், கூட்டு வட்டியின் நன்மைகளும் தான்.

     

     

  • 10:25 AM

    Why Jason Sanjay Went To GK Mani Wedding | ஜி.கே.மணியின் திருமண விழாவிற்கு விஜய் மகன் சென்றது ஏன்?

    பாமக கௌரவ தலைவர் ஜி.கே.அன்புமனியின் இல்லத்திருமண விழாவிற்கு, நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. (மேலும் படிக்க)

  • 10:21 AM

    TVK Anniversary LIVE | விஜய்யை பாராட்டி பாட்டு!!

    தமிழக வெற்றிக்கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா நடைப்பெற்று வருகிறது. இதில், கண்டா வரச்சொல்லுங்க பாடலை பாடிய கிடாக்குழு மாரியம்மாள் த.வெ.க கட்சிக்காக ஒரு பாடலை பாடினார். 

  • 10:10 AM

    கோவை மக்கள் கவனத்திற்கு!

    கோவை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு விமான நிலையத்தில் பாஜகவினர் மலர் தூவி உற்சாக வரவேற்பு. இன்று இரவு ஈஷா யோகா மையம் செல்ல உள்ளார். மேலும் படிக்க

  • 09:55 AM

    Additional Pension: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம்

    அரசு சமீபத்தில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஓய்வூதியதாரர்கள் இதன் நேரடிப் பலனைப் பெறுவார்கள். இதன் அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

     

  • 09:53 AM

    இந்த பிரபலங்களின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

    சினிமா தொடங்கி அரசியல் வரை பல்வேறு நபர்கள் புகழ் பெற்றதும் அல்லது பெறுவதற்காக பெயரை மாற்றி கொள்கின்றனர். அந்த வகையில் பெயரை மாற்றி கொண்ட நட்சத்திரங்கள் பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

  • 09:52 AM

    EPFO Interest Rate: இபிஎஃப்ஓ வட்டி விகிதம் மாறுமா?

    சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை நடத்தும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சுமார் 7 கோடி சந்தாதாரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். முழுமையான வியரங்களை இந்த பதிவில் காணலாம்.

     

  • 08:52 AM

    Maha Shivratri 2025: இன்று மகா சிவராத்திரி பெருவிழா

    இன்று மகா சிவராத்திரி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்த திருநாளில், சிவ பெருமானுக்கு பிடித்த ராசிகள் பற்றி தெரிந்துகொள்ளலாம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா? 

     

  • 08:45 AM

    ஆனந்த வாழ்வைப் பெற உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்

    மகா சிவராத்திரி நன்னாளில் விரதம் இருந்து, பூஜை செய்து, இரவு முழுவதும் விழித்து சிவ மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றனர் பெரியோர்கள். சிவபெருமானின் அருளைப் பெற உச்சரிக்க வேண்டிய மந்திரங்களும், ஸ்லோகங்களும், நாமங்களும் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

  • 07:51 AM

    விராட் கோலி பின்பற்றும் 5 வழிமுறைகள்!

    கடந்த காலங்களில் தனது உடற்தகுதி நிலைகள் குறித்து விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், கோலி தன்னை சுறுசுறுப்பு, சகிப்புத்தன்மை மற்றும் ஆரோக்கியத்தின் முன்னோடியாக மாற்றிக்கொண்டார். மேலும் படிக்க

     

  • 06:56 AM

    இந்தியாவிற்கு எதிராக பாட் கம்மின்ஸ் குற்றச்சாட்டு!

    சாம்பியன்ஸ் Trophy: இந்திய வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தானுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளாது என்று தெரிவித்திருந்தது. மேலும் படிக்க

     

  • 06:52 AM

    அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு!

    2025-26 நிதியாண்டுக்கான விரிவான நிதி நிலை அறிக்கையை மார்ச் 14-ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார், அதைத் தொடர்ந்து மார்ச் 15-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் படிக்க

  • 06:39 AM

    மாசி 14 புதன்கிழமை ராசிபலன்!

    Today Rasipalan: இன்று பிப்ரவரி 25ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

     

Trending News