Tamil Nadu Lok Sabha Elections 2024 Polling Update News in Tamil: 18வது மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு (Phase 1) இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளிலும், கன்னியாகுமரியில் விளவங்கோடு தொகுதியிலும் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA Alliance), எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி (INDIA Alliance) மற்றும் அதிமுகவின் கூட்டணி என மும்முனை போட்டி தமிழ்நாட்டில் நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், வாக்காளர்கள் எவ்வித தொந்தரவும் இன்றி வாக்குச் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஏப். 19ஆம் தேதியான இன்று பொது விடுமுறை என்பதால் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை இயங்காது. தனியார் நிறுவனங்களும் சில விடுமுறைவிடப்பட்டுள்ளது. எனவே, மக்கள் தங்களின் வாக்கைச் செலுத்தி ஜனநாயக கடமையாற்றினர்.