Live Update: இன்றைய முக்கிய செய்திகள் (மே 19, 2022)

Today News, Tamil Nadu Top News, Tamil Nadu Latest News, Tamil Nadu Crime News, Tamil Nadu Breaking News: தமிழ்நாட்டில் இன்று (மே 19, 2022) நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்!

Last Updated : May 19, 2022, 10:40 AM IST
    Tamil Nadu Top News Today: தமிழ்நாட்டில் இன்று (மே 19, 2022) நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்!
Live Blog

19 May, 2022

  • 19:00 PM

    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு  விசாரணையில் சிபிஐயின் இறுதி அறிக்கை மோசடியானது: வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு  விசாரணையில் சிபிஐயின் இறுதி அறிக்கை மோசடியானது என்றும் இதில் நீதிமன்ற மேற்பார்வையில் மறு விசாரணை வேண்டும் என்றும் சிபிஐ விசாரணையை கண்டித்து 22ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியுள்ளார்.

  • 17:00 PM

    வைகோவை நேரில் சந்தித்து பேரறிவாளன் நன்றி!

    தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, 31 ஆண்டுகள் சிறையில் வாடி, தற்போது விடுதலை ஆகியுள்ள பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், இன்று (19.05.2022) காலை 11.30 மணி அளவில், சென்னை அண்ணா நகரில் உள்ள, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்திற்கு வருகை தந்தனர். வைகோவை சந்தித்த அவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

  • 16:30 PM

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2 முதல் 9 வரை நடைபெறும்: தேர்வுத்துறை 

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த மே 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

     தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் 9.55 லட்சம் மாணவ-மாணவிகள் 3,936 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2 முதல் 9 வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

  • 15:30 PM

    விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

    தலித் மக்களின் மீது தொடரும் சாதி வன்கொடுமைகளை கண்டித்து ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  • 15:15 PM

    உஷார் மக்களே: கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தின் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 14:30 PM

    ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் அறிமுகம்!

    கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படுக்கை விரிப்பு,கம்பளி போர்வை சேவைகள் தற்போது படிப்படியாக மீண்டும் வழங்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

    1. நெல்லை எக்ஸ்பிரஸ் - 19.05.22 முதல்,

    2. பொதிகை எக்ஸ்பிரஸ் - 21.05.2022 முதல்,

    3. நெல்லை -  ஸ்ரீ வைஷ்ணவ தேவி கத்ரா 23.05.22 முதல்,

    4. மதுரை - புனலூர்  23.05.22 முதல்,

    5. மதுரை - டெல்லி சம்பர்க் கிராந்தி 24.05.22 முதல்,

    6. மதுரை சென்னை மஹால் எக்ஸ்பிரஸில் 26.05.22 முதல், மீண்டும் படுக்கை விரிப்புகள், கம்பளிப் போர்வைகள், தலையணைகள் வழங்கப்படும்.

  • 12:15 PM

    ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்த வட மாநில இளைஞர்கள்

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள பெருமாள் கோயில் மேடு பகுதியில் கடந்த 5 ஆம் தேதியன்று நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் இயந்திரத்தை கொண்டு ஏடிஎம்யை உடைத்து அதில் இருந்த சுமார் 4 லட்சத்து 89 ஆயிரத்து 900 ரூபாய் கொள்ளையடித்து சென்றனர். 

  • 11:45 AM

    ஜிஎஸ்டி முடிவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது:

     

  • 11:30 AM

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகரிக்கும் நீர்வரத்து:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு கடந்த ஒருவாரமாக பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்துக்கொண்டிருக்கிறது. அணையின் முழுக்கொள்ளளவான 44.28அடிகளில் 41.49 அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது.

  • 11:15 AM

    பழனி மலைக்கோவில் காணிக்கை நிலவரம்:

    பழனி மலைக்கோவில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 2,20,65,120 ரூபாயும், தங்கமாக 974 கிராமும், வெள்ளியாக 9111 கிராமமும்,  வெளிநாட்டு கரன்சியாக 340 நோட்டுக்களும் கிடைக்கப்பெற்றன.

  • 11:00 AM

    சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்:

     

  • 11:00 AM

    தமிழக அரசின் ஓராண்டு சாதனை:

    தொல்பொருட்கள் கண்காட்சி, தமிழக அரசின் ஓராண்டு சாதனையின் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார் தமிழக முதலமைச்சர்.

  • 10:45 AM

    தொடர்ந்து தங்கத்தின் விலையில் ஏற்றம்: இன்றைய விலை நிலவரம் இதோ 

    இன்று காலை நிலவரப்படி சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,747 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,739 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 64 ரூபாய் உயர்ந்து 37,976 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.10-க்கும் ஒரு கிலோ வெள்ளி 65,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • 10:45 AM

    ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக சிலிண்டர் விலை உயர்வு

    மக்களுக்கு அதிரச்சி அளிக்கும் வகையில், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 3 ரூபாய் அதிகரித்து 1,018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • 10:45 AM

    மாற்றுத்திறனாளி உயிரிழப்பு:

    குன்னூர் மலைப்பாதையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் கேரளா சேர்ந்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியாறுக்கு 2 கி.மீ முன்பு கார் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 40 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த மாற்றுத்திறனாளியான  ஜோஸ்குட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  • 10:45 AM

    இரண்டாவது நாளாக தடை நீடிப்பு:

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியிலிருந்து 22 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இரண்டாவது நாளாக தடை நீடிப்பு

  • 10:45 AM

    சேலத்தில் ஓராண்டு விளக்க கூட்டம்: முதல்வர் பங்கேற்கிறார்

    வரும் 24 ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெறவுள்ளது.  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Trending News