உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு ஜில் நியூஸ்!

தமிழகத்தில் மே 20ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Written by - R Balaji | Last Updated : May 17, 2025, 03:57 PM IST
  • வரும் 22ஆம் தேதி அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
  • சென்னை வானிலை ஆய்வு மையம்
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு ஜில் நியூஸ்!

தமிழகத்தில் மே 20ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் வரும் மே 22ஆம் தேதி அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 22ம் தேதி அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். தமிழகத்தில் மே 20ம் தேதி வரை மழை தொடரும்.

கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கிருஷ்ணகிரி,தருமபுரி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் காலை மிதலே வெயில் இல்லாமல் வானிலை சற்று சாந்தமாக உள்ளது. பல பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. மழையால் வெயில் குறைந்து இதமான சூழல் நிலவுகிறது. இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, புதுவையில் மாலை 4 மணிக்கு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிங்க: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

மேலும் படிங்க: ரியல் எஸ்டேட் : வீட்டுமனை பதிவு, தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News