Madras High Court: தமிழகத்தில் இசை வேளாளர் சாதி சான்றிதழ்களை இசை வெள்ளாளர் என தவறான பெயரில் வழங்கப்பட்டு வருவதாக இசை வேளாளர் இளைஞர் கூட்டமைப்பின் நிறுவனர் குகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்க கூடாது என மனுதாரர் அவரது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
Community Certificate: மனுதாரரின் மனுவில் குறிப்பிட்டது என்ன?
அந்த மனுவில், தன் மகளுக்கு சாதி சான்றிதழ் கோரி மாம்பலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்த போது இசை வேளாளர் என்பதை இசை வெள்ளாளர் என குறிப்பிட்டு சாதி சான்று வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கான பட்டியலில் இருக்கும் இசை வேளாளர் பெயரை, இசை வெள்ளாளர் என மாற்றி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருவது தொடர்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கான ஆணையத்திடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவரது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
Community Certificate: மனுதாரரின் வாதம் என்ன?
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ராஜசேகர் அமர்வில் இன்று (ஏப். 22) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி, "இது தொடர்பான தமிழக அரசின் அரசாணையில் இசை வேளாளர் என்பதை ஆங்கிலத்தில் isaivellalar 'இசை வெள்ளாளர்' என இருப்பதால் அதனடிப்படையில் குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்குப்படுகிறது" என குறிப்பிட்டார்.
Community Certificate: இதனால் பாதிப்பு இருக்கா...?
அப்போது நீதிபதிகள், 'இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?' என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், "பாதிப்பில்லை என்றாலும், ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும். சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்க கூடாது" என வாதிட்டார்.
Community Certificate: நீதிபதிகள் உத்தரவு
இதை கேட்ட நீதிபதிகள்,"ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் எழுத்து பிழைகள் இல்லாமல் ஒரே மாதிரியான பெயரில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார். மேலும் மனுதாரரின் மகளுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகளை சரி செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
Community Certificate: சாதிச் சான்றிதழ் ஏன் அவசியம்?
நாடு முழுவதும் சாதிச் சான்றிதழ் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றாக உள்ளது. சாதி சான்றிதழ் குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு திட்டங்களில் சலுகைகளை பெற உதவும். மேலும், கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடுகளை பெறுவதற்கு சாதிச் சான்றிதழ் அவசியமாகும்.
பட்டியல் சாதிகள் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC) உறுப்பினர்களுக்கு சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் இட ஒதுக்கீடு முக்கியமாகிறது. இட ஒதுக்கீட்டை பெற சாதிச் சான்றிதழ் அவசியம். முற்பட்ட வகுப்பினருக்கு தற்போது சாதி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு தற்போது வழங்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









