Minor Boy Kidnap Case: 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் மற்றும் கே.வி. குப்பம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் இன்று (ஜூன் 16) மதியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராமன் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து, தனது வழக்கறிஞர்கள் படையுடன் பூவை ஜெகன்மூர்த்தியும் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு மதியம் 3.30 மணியளவில் வருகை தந்தார்.
Minor Boy Kidnap Case: உயர் நீதிமன்றம் சராமாரி கேள்விகள்
மேலும், பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் முன்ஜாமின் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து முன் ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "கட்டப்பஞ்சாயத்து செய்யவா மக்கள் ஓட்டு போட்டு உங்களை சட்டப்பேரவைக்கு அனுப்பினார்கள்?" என பூவை ஜெகன்மூர்த்தியிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், "200-300 பேர் கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம். நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" என பூவை ஜெகன்மூர்த்திக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தார்.
ஏடிஜிபி ஜெயராமன் கைது
கடத்தலுக்கும் ஏடிஜிபிக்கு தொடர்பில்லை என கூறினாலும் அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதால் அவரை கைது செய்ய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலேயே ஏடிஜிபி ஜெயராமனை போலீசார் கைது செய்தனர். ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவர் தொடர்ந்த ஜாமீன் மனு விசாரணையை ஜூன் 26ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
காவல்துறை வாதம் என்ன?
முன்னதாக ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், இந்த கடத்தில் வழக்கிற்கும் ஜெகன்மூர்த்திக்கும் தொடர்பு இல்லை என வாதிட்டனர். ஆனால் போலீசார் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் தாமோதரன், சிறுவன் கடத்தல் வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் ஒருவர். அவர் அளித்த வாக்குமூலத்தில் ஜெகன்மூர்த்தியின் பங்கு குறித்தும், கடத்தப்பட்ட சிறுவனை திரும்ப கொண்டுவந்து விட்டதே ஏடிஜிபி ஜெயராமனின் காரில்தான் என்பது குறித்தும் குறிப்பிடட்டுள்ளார். தொடர்ந்து, இதனால்தான் கடத்தலுக்கும் ஏடிஜிபிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க பூவை ஜெகன்மூர்த்தியையும் கைது செய்ய வேண்டி உள்ளதாக முறையிட்டது குறிப்பிடத்தக்கது.
Minor Boy Kidnap Case: கடத்தில் வழக்கு விவரம்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜா என்பவரின் மகன் தனுஷ்(23). இவருக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்தப் பெண் தேனியில் இருந்து புறப்பட்டு தனுஷ் வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த மே மாதம் 15ஆம் தேதி காதல் திருமணம் செய்துக் கொண்டு தனுஷ் தலைமறைவான தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் களாம்பாக்காத்தில் வீட்டில் இருந்த தனுஷின் 17 வயது தம்பியை காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து தனுஷின் தாயார் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் செய்தார்.
திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வனராஜா(55), மணிகண்டன்(49), கணேசன்(47) ஆகிய 3 பேரை 3 நாட்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுவன் கடத்தல் சம்பவத்தில் திருவள்ளூர் எஸ். பி. தலைமையிலான தனிப்படை போலீசார் மகேஸ்வரி என்ற பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியும் இந்த சம்பவத்தில் தலையிட்டு பேசியதாகவும் இதனால் அவரை கைது செய்ய திருவள்ளூர் டிஎஸ்பி தலைமையில் திருவள்ளூர், வெள்ளவேடு, நாசர் பேட்டை இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 500கும் மேற்பட்ட போலீசார் பூந்தமல்லி அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள பூவை ஜெகன்மூர்த்தி வீட்டின் முன் குவிந்தனர்.
போலீசார் குவிக்கப்பட்டதால் புரட்சி பாரதம் தொண்டர்களும் அதிகளவில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தொடர்ந்து, திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி மற்றும் ஐந்து பேர் கொண்ட குழுவினர் அவர் வீட்டிற்குள் சென்று அனைத்து அறைகளையும் சோதனையிட்டனர்.
ஆனால் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் அது சம்பந்தமான சம்மனை வழங்கிவிட்டு சென்றனர். அதிலும், ஏடிஜிபி ஜெயராமனின் அரசு வாகனமான காரில் வைத்ததுதான் ஆள் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் இன்று மதியம் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அடிப்படை அறிவு கூட இல்லையா? இபிஎஸ்-க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
மேலும் படிக்க | இந்த 2 மாவட்டங்களில் கனமழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமை தொகை: முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









