)
Madras High Court: சுமார் ரூ.1000 கோடி வரை டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் (Alleged TASMAC Scam Case) நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Madras High Court: ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த மனு
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் (Aakash Bhaskaran) மற்றும் விக்ரம் ரவீந்திரன் (Vikram Ravindran) ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
Madras High Court: அமலாக்கத்துறை ஆவணங்கள் தாக்கல்
அதன்படி, அமலாக்கத்துறை (Enforcement Directorate) தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், தங்கள் அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைய வேண்டாம் என ஒட்டப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெறுவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Madras High Court: இடைக்கால உத்தரவு
இதையடுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை நீதிபதிகள், தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கி அமர்வு இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
Madras High Court: ED-க்கு எந்த அதிகார வரம்பும் இல்லை
நீதிபதிகள் இன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில், "டாஸ்மாக் முறைகேட்டில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு அமலாக்கத் துறையிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், இருவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும், பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறைக்கு எந்த அதிகார வரம்பும் இல்லை" என குறிப்பிட்டு, அமலாக்கத் துறையின் மேல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Madras High Court: ED-இன் கோரிக்கையும், நீதிமன்றத்தின் மறுப்பும்...
ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனை சட்ட விதிகளை மீறியது என்றும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் நீதிமன்றம் அதன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அமலாக்கத்துறை அதன் சோதனையின் போது பறிமுதல் செய்த பொருட்களை மீண்டும் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பிரதான வழக்கின் விசாரணையை அடுத்த நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தும் உத்தரவிட்டனர். மேலும், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக உத்தரவை நிறுத்தி வைக்கும்படி, அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தனர். ஆனால், நீதிபதிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ