Madras High Court Recruitment 2025: சென்னை உயர் நீதிமன்றம் உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது. பல்வேறு காலிப்பணியிடங்களை நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் அறிவிக்கப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நிரந்தர வேலை மற்றும் ஒப்பந்த அடிப்படையிலும் பணிகள் நிரப்பப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் வேலை பார்க்க ஆவலுடன் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, சென்னை உயர் நீதிமன்றத்தில் 28 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி குறித்த விவரம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட உதவியாளர் பணிக்கு 28 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளுடன் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சட்டத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பார் கவுன்சிலில் வழக்கறிஞராகவோ அல்லது இந்திய நீதிமன்றங்களில் அட்டார்னியாகவோ பதிவு செய்திருப்பது கட்டாயம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. படிப்பு காலத்தில், அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். முதுகலை அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளை தொடர்பவர்களால் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.
வயது விவரம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 30 வயது நிறைந்திருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட உதவியாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.50,000 வழங்கப்படும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். தேர்வாகும் பணியாளர்களுக்கு சம்பளம் தவிர வேறு எந்த சலுகையும் கிடையாது.
இந்த பணிக்கு சென்னை அல்லது மதுரையில் நேர்காணல் நடத்தப்பட்டு, பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். சென்னை உயர் நீதிமன்றம் அல்லது மதுரை கிளை நீதிமன்றத்தில் பணிக்கு ஓராண்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் நீதிமன்ற பணிகள் மட்டுமின்றி, நிர்வாக பணியிலும் ஈடுபட வேண்டும். நீதிபதிகள் வழங்கும் பணிகளை மேற்கொள்வது, நீதிபதிகளுக்கு உதவியாக இருப்பது, விசாரணைக்கு வரும் வழக்குகள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களையும் இணைத்து உரிய முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தபால் வழியாகவோ அல்லது இமெயில் வழியாகவோ டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும். mhclawclerkrec@gmail.com என்ற இமெயில் மூலமாக அனுப்ப வேண்டும். இல்லையெனில் The register General, High court madras - 6000104 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : தவறான வங்கி கணக்கை கொடுத்தவர்கள் என்ன செய்வது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









