கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை சித்திரை பெருவிழா!

உலகப்புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் மகிழ்ச்சி மழையில் உள்ளனர்.

Written by - RK Spark | Last Updated : Apr 29, 2025, 01:32 PM IST
  • மதுரை சித்திரை பெருவிழா.
  • கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • மகிழ்ச்சியில் திளைத்த பக்தர்கள்.
கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை சித்திரை பெருவிழா!

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும் கோவிலாகும். இந்த விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா இன்று காலை மிதுன லக்கனத்தில்  சுவாமி சன்னதி முன்பாக  உள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் வெகுவிமர்சையாக தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் தர்ப்பை புற்களை வைத்து வெண்பட்டால் சுற்றப்பட்டிருந்தன. விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் முன்னே எழுந்தருளிய நிலையில் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தின் முன்பாக சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனா்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | மீண்டும் அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜ்... பால்வளத்துறை ஒதுக்கீடு!

கொடியேற்றத்தை முன்னிட்டு கம்பத்தடி மண்டபம் முழுவதும் பல்வேறு வண்ண மலர்களாலும்,  மக்காச்சோளம் உள்ளிட்ட நவதானியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் தங்க கொடி மரத்தில் பிரமாண்டமான மாலை ஏற்றப்பட்டு மலர்கள் தூவ கொடிகம்பத்திற்கு பூஜிக்கப்பட்ட நீரினை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்ற விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. சித்திரை திருவிழா கொடியேற்றியபோது பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பியவாறு சுவாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றம் முடிவடைந்த நிலையில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மனுக்கும் சுந்தரேசுவரர் பிரியாவிடை சுவாமிக்கும் சிறப்பு  தீபாரதனை காண்பிக்கப்பட்ட பின்னர் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மனும் கோவில் 2 ஆம் பிரகாரத்தில் கோவில் யானை மற்றும் பசு முன்னே செல்ல மேளாதாள மங்கள வாத்தியங்கள் முழங்க 3 முறை வலம்வந்து பின்னர் மடப்பள்ளியில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர்.

கோவில் வளாகத்தில் சுவாமியும் அம்மனும் உலாவந்தபோது வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றுத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழா இன்று தொடங்கி 12 நாட்கள் திருவிழாவாக நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழாவின் போது நாள்தோறும் காலை மற்றும் மாலைகளில் நான்கு மாசி வீதிகளில் கற்பக விருட்சம் சிம்ம வாகனம், பூத அன்னவாகனம், கைலாசபர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு , தங்க குதிரை, ரிஷப வாகனம், நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளும் வீதி உலா நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் மாசி வீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வீதிஉலாவின் போது சாமி தரிசனம் செய்வர்.

விழாவின் சிகர நிகழ்வாக வரும் மே -6 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே-7 ஆம் தேதி திக்குவிஜயமும், மே -8 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், மே-9 ஆம் தேதி தேரோட்டமும், மே 10 ஆம் தேதி த நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து 10 ஆம் தேதி தெய்வேந்திர பூஜையுடன் விழா மீனாட்சியம்மன் கோவிலின் இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா நிறைவடையவுள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே-12ஆ ம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழா கொடியேற்றத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | அண்ணாமலைக்கு எம்பி பதவி இல்லை! வேறு ஒருவருக்கு கொடுத்த பாஜக!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News