புகழ்பெற்ற மதுரையின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபவமும், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவமும் ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெறும். மதுரை மாவட்டத்தில் இருந்து மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்வார்கள். ஆண்டுதோறும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு மதுரையில் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 30 ஆம் தேதி பூதம் மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமியும், அம்மனும் திருவீதி உலா நடைபெறுகிறது. மே 1 ஆம் தேதி கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகன உலாவும், மே 2 ஆம் தேதி தங்கப்பள்ளத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருள்கின்றனர். மே 3 ஆம் தேதி தங்க குதிரை வாகன உலா மற்றும் வேடர் பறி லீலை நிகழ்வு நடைபெறுகிறது.
மே 4 ஆம் தேதி, ரிஷப வாகன உலா மற்றும் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை யும், நந்திகேஸ்வரர் மற்றும் யாளி உலா மே 5 ஆம் தேதியும் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் மற்றும் ஊடல் உற்சவம் வெள்ளி சிம்மாசன உலா மே 6 ஆம் தேதி நடைபெறும். மே 7 ஆம் தேதி திக் விஜயமும், மே 8 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெறுகிறது.
சித்திரைப் பெரும் திருவிழாவின் 11ஆம் நாள் திருநாளான மே 9 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக மே 11 ஆம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சியும், மே 12ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மக்களின் வசதிக்காக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளக் கூடிய மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தகவல் தெரிவித்துள்ளார். மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு கட்டும் விதமாக பின்னர் வரக்கூடிய ஒரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை... பேரவையில் புலம்பிய PTR - என்ன மேட்டர்?
மேலும் படிங்க: இந்த ஆட்சியில் என்ன தவறு செய்துள்ளோம்? - அமைச்சர் துரைமுருகன் கேள்வி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ