)
மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோடலில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது, இந்த ஆய்வுக் கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் தியாகராஜன், மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றோர்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் "தமிழகத்தில் இதுவரை 3707 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட பின்னர் அதிக குடமுழுக்கு நடத்தப்பட்டது தற்போதைய திமுக ஆட்சியில் தான். 2009 ஆம் ஆண்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது, குடமுழுக்கு நடத்துவதற்காக திருப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்.
கடந்த 2009 ஆம் ஆண்டு கடைசியாக இந்த கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. 23 கோடியே 70 இலட்ச ரூபாய் மதிப்பில் 186 திருப்பணிகள் நடைபெற்று வருகிறது, வீர வசந்தராயர் மண்டப தூண்களுக்கான கற்கள் கிடைக்காத காரணத்தால் புனரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது, 79 தூண்களில் 18 தூண்கள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளை முடிக்காமலேயே குடமுழுக்கு நடத்தலாம் என அர்ச்சகர்கள் முடிவெடுத்தால் டிசம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்தப்படும், இல்லாவிட்டால் மண்டப புனரமைப்பு பணிகளும் முடிக்கப்பட்டு பிப்ரவரி மாதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும்" என்றார் கரூர் துயர சம்பவத்தில் முதலமைச்சருக்கு சவால் விடுத்து விஜய் வெளியிட்ட வீடியோ தொடர்பான கேள்விக்கு, "இரண்டு நீதிமன்றங்கள் சொன்ன கருத்து தான் எங்களது கருத்தும்" என்றார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மதுரையின் இருக்கிறது. இத்தலத்தில் முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது. இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். அதோடு திருவாசகத் தலங்களுள் ஒன்று எனும் பெருமையையும் உடையது. இத்தலத்தின் பெயரைச் சொன்னாலே முக்தி என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.
பாண்டியர்கள் முடிசூட்டிக் கொள்ளும் தலங்களுள் இது முதன்மைத் தலமாகும். சைவர்கள் பூசும் திருநீற்றின் சிறப்பைக் கூறும் திருநீற்றுப் பதிகத்தை இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் பாடினார். இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும். இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274-ஆவது சிவாலயமாகவும், 192வது தேவாரத்தலமாகவும் உள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ