Madurai Encounter: மதுரையில் கிளாமர் காளி கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு கடந்த 29ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கிளாமர் காளி கொலை வழக்கில் சுள்ளான் முத்துப்பாண்டி என்ற நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
Madurai Encounter: கொலை வழக்கில் 7 பேர் கைது
அதனைத் தொடர்ந்து பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் தாயார் ஜெயக்கொடி மற்றும் சிவகங்கை மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், மதுரை கல்மேடு நந்தகுமார், காமராஜபுரம் நவீன் குமார், சென்னையை சேர்ந்த கார்த்திக், திருப்பூரை சேர்ந்த அசன் ஆகிய ஏழு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
Madurai Encounter: போலீசார் நடத்திய என்கவுண்டர்
இந்த நிலையில் அந்த கொலை வழக்கில் மேலும் குற்றவாளியாக கருதப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள தோப்பு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை பிடிக்க முற்பட்டபோது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் சுட்டதில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார். இரு காவலர்கள் மற்றும் இரு கைதிகள் காயமடைந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Madurai Encounter: போலீசார் அளித்த விளக்கம்
வேறொரு கொலை முயற்சியில் ஈடுபட இந்த ரவுடி கும்பல் திட்டமிட்டு வந்ததாகவும், அந்த நேரத்தில் இந்த என்கவுண்டர் நடந்திருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தகவல் அளித்த காவல் ஆணையர் லோகநாதன்,"சுபாஷ் சந்திரபோஸ் மீது கிளாமர் காளி கொலை வழக்கு மற்றும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு இருக்கக்கூடிய நிலையில் அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும் போது அவர் துப்பாக்கி வைத்து காவல் ஆய்வாளரை சுட முயன்றார். அப்போது பாதுகாப்பு கருதி காவல் ஆய்வாளர் சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்துள்ளார்.
மதுரை மாநகர் பகுதியில் இதுபோன்று தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்று கைது செய்யப்பட முயன்றபோது அவர் ஆய்வாளரையே சுட முயன்றதால் என்கவுண்டர் செய்துள்ளோம்" என்றார்
மேலும் படிக்க | ஊட்டி, கொடைக்கானலுக்கு டூர் போறீங்களா... இனி இது கட்டாயம் மக்களே - மறக்க வேண்டாம்!
மேலும் படிக்க | பாஜகவின் சதி திட்டங்களுக்கு திமுக தடையாக உள்ளது - முதல்வர் முக ஸ்டாலின்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









