Varichur Selvam: கோயம்புத்தூரில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டு பிடிக்க காவல்துறையினர் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தகவல் பரவிய உடனே மதுரையில் வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
Varichur Selvam: கோவை சென்று 13 ஆண்டுகள் ஆகிவிட்டது
அப்போது பேசிய அவர்,"நான் எங்கும் செல்வதில்லை, காவல்துறைக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையாக என் பேரன், பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன், தப்பான செய்தியாக உள்ளது. என் தலைமையில் இன்று ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இந்த செய்தி கேட்டு அங்கு போக முடியாமல் ஆகிவிட்டது. நான் திருந்தி கல்யாணம் கச்சேரிக்கு போய்க்கொண்டிருக்கிறேன்.
ஒரு வருடத்தில் மட்டும் 15 திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன். அப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன், எந்த பிரச்சனைக்கும் நான் செல்வதில்லை. நான் கோயம்புத்தூர் சென்று 13 வருடம் ஆகிறது, அங்கு நான் செல்ல வாய்ப்பில்லை. மேலும் அங்கு உள்ளவர்களிடமும் நான் எந்த தொடர்பிலும் இல்லை. என்னுடைய நண்பன் செல்லையா என்பவன் உள்ளார், அவனிடம் செல்போனில் பேசுவேன். அமைதியாக இருந்தாலும் எதற்கு என் மீது அவதூறு பரப்புகிறார்கள் என தெரியவில்லை. ஆண்டவன் புண்ணியத்தில் எனது தந்தை நல்லா சம்பாதித்து வைத்திருக்கிறார். சொத்து உள்ளது நான் எதற்கு எங்கோ செல்ல வேண்டும்" என்றார்.
Varichur Selvam: சேட்டை செய்தால் சுட தான் செய்வார்கள்
தற்போது தமிழ்நாட்டில் என்கவுண்டர்கள் அதிகம் நடப்பது குறித்த கேள்விக்கு,"சேட்டை பண்ணினால் சுட தான் செய்வார்கள். திருந்தினால் காவல்துறையினர் விட்டுவிடுவார்கள். ஏதாவது தப்பு செய்தால் சுடாமல் என்ன செய்வார்கள்? ரவுடிசத்தை விட்டுவிட்டு ஒதுங்கி விட்டால் காவல்துறையினர் விட்டுவிடுவார்கள். இல்லையென்றால் நான் கொலை செய்வேன் என கூறிகொண்டே ரவுடிசம் செய்தால் காவல்துறையினர் சுட்டு தான் பிடிப்பார்கள்" என்றார்.
என்கவுண்டருக்கு ஆதரவா? என்ற கேள்விக்கு,"காவல்துறையினர் நடத்தும் என்கவுண்டர்களை ஆதரித்து தான் ஆக வேண்டும். 10 கோடி மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் காவல் துறையினர் தான் உள்ளனர். இவர்கள் செய்யும் சேட்டைக்கு என்ன செய்ய முடியும். அங்க கொலை இங்க கொலை என பண்ணினால் போலீஸ் சுட தான் செய்வார்கள்.
Varichur Selvam: 'என் மீது கண்ணு வைக்கிறார்கள்'
நல்லவர்களை சுட்டால் நல்லவர்களை சுட்டு விட்டார்கள் என போலீசாரை குறை சொல்லலாம். ஆனால் சுட்டவர்கள் எல்லாம் ரௌடி பய, திருட்டுப்பய, காவாலிப்பய. இவர்களை தான் போலீஸ் சுடுகிறார்கள். நானெல்லாம் திருந்திட்டு எந்த பிரச்சினை வேண்டாம் என்று இருக்கிறேன். இப்போது நான் எங்கு சென்றாலும் போலீசாருக்கு தகவல் சொல்லிவிட்டு தான் போகிறேன். எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது. சொந்த பந்தத்திற்குள்ளான பிரச்சனை தான் குற்றச்சாட்டு.
கடைசியாக எனக்கு 2018 மதுரையில் ஒரு சின்ன வழக்கு. கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. என்னை காவல்துறையினர் பார்க்கிறார்கள், வீட்டை சுற்றி கேமரா உள்ளது. எனக்கு முழுவதும் ரெக்கார்டு இருக்கிறது. 'வரிச்சியூர் செல்வம் இப்படி இருக்கிறாரே என கண்ணு வைக்கிறார்கள்.
நான் இப்படி இருப்பதே பொறாமை தான். இந்த ஸ்டைலில் இருப்பதே சிலருக்கு பொறாமையாக இருக்கிறது.
Varichur Selvam: 7 வழக்குகளே உள்ளன
கோயம்புத்தூரில் இருந்து எந்த காவல்துறையினரும் என்னிடம் பேசவில்லை. மதுரையில் உள்ள காவல்துறையினரிடம் நான் தான் இதுபோன்ற செய்தி வருவதாக கூறினேன். என் மீது வழக்கு உள்ளது. ஏழு வழக்குகள் தான் உள்ளன. அதில் இரண்டு கொலை வழக்கு, மற்றவை அடிதடி வழக்குகள்" என்றார்.
விஜய் கட்சியில் இணைவீர்களா என்பது குறித்த கேள்விக்கு?,"நமக்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எப்போதும் ஜாலி மேன் தான் நான். படம் பார்த்தோமா சாப்பிடறோமா? தூங்குகிறமோ? டான்ஸ் ஆடுகிறோமா என ஜாலியா என்ஜாய் பண்றோம். இதுதான் என்னுடைய பொழுதுபோக்கு.
Varichur Selvam: ஓட்டுநர் செந்தில்குமார் கொலை வழக்கு
மதுரை விமான நிலையத்தில் படம் ரிலீஸ் ஆனபோது நடிகர் விஜய் நேரில் சந்தித்து திரையில் வில்லன்களை அதிகளவிற்கு அடிக்க வேண்டாம் என அவரிடம் கோரிக்கை விடுத்தேன்" என்றார். ஓட்டுனர் செந்தில்குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கோயம்புத்தூரில் யாரும் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு, "அது போன்று யாரும் இல்லை" என தெரிவித்தார். சுட்டு பிடிக்க வேண்டும் என்று வந்த செய்தி எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. அதாவது தவறு செய்திருந்தால் ஓகே எதுவும் செய்யாத நிலையில் இப்படி செய்தி வந்தது ஏன் என தெரியவில்லை.
Varichur Selvam: 'நான் நிரபராதி'
காவல்துறையினர் பெயர் வாங்குவதற்காக என்கவுண்டர் செய்கிறார்கள் என்ற கருத்து தவறானது. பெயருக்காக எதற்காக போலீஸ் சுட வேண்டும் என்ற தேவை ஏன் இருக்கிறது. டிஜிபி, ஏடிஜிபி தற்போது தப்பு செய்தால் கொல்லுங்கள் என மட்டும் தான் சொல்வார்கள். யாரையும் பிடித்து சென்று கண்ணை கட்டி என்கவுண்டர் செய்யவில்லை. இப்போது உள்ள காவல் துறையினர் தப்பு செய்தால் விடுவதில்லை. ஒன்னு காலை உடைப்பார்கள் இல்லை என்றால் காலில் சுட்டு பிடித்துவிடுவார்கள்.
மனிதர்களாக இருந்தால் சரி மிருகமாக இருந்தால் என்கவுண்டர் செய்துதான் ஆக வேண்டும். நான் செய்ததும் தவறு தான், அவர்கள் என் மீது பொய்யான வழக்கு ஒன்றும் போடவில்லை. நான் நிரபராதி என்பதே நீதிமன்றத்தில தெரிவிப்போம்
Varichur Selvam: போதை மாத்திரை, கஞ்சா...
மதுரை மாநகர காவல் ஆணையர் வந்து நான்காண்டுகள் ஆகிறது. இதுவரை எந்த என்கவுண்டர் நடக்கவில்லை, தப்பு செய்ததால் என்கவுண்டர் நடந்துள்ளது. அன்று சரக்கு போடுவதால் எங்கு விற்கிறார்கள் என தெரியும். ஆனால் தற்போது மாத்திரை தான் அதிக அளவுக்கு பயன்படுத்துகிறார்கள்.
போதை மாத்திரை, கஞ்சா அதிக அளவில் விற்கப்படுகிறது. தென்மண்டல தலைவர் அஸ்ராகார்க் இருக்கும்போது இதனை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். தற்போது காவல்துறையினர அதனை நடைமுறைப்படுத்துகின்றனர்.
Varichur Selvam: ரவுடியாக இருப்பது கெத்து இல்லை
ஜெயிலுக்குள் இருக்கும் போது கஞ்சா எப்படி வருகிறது என்று கேட்பேன். ஆந்திரா , ஒடிசா பக்கத்தில் இருந்தும் கஞ்சா வருவதாக கூறுவார்கள். தற்போது தேனி மாவட்டத்தில் எல்லாம் கஞ்சா வருவதில்லை. ரவுடியா இருப்பது கெத்து என நினைத்து ரீல்ஸ் வீடியோ பதிவு செய்தால், கை, காலை தூக்க முடியாமல் கை உடைந்து கிடக்க வேண்டும், காலை தூக்க முடியாமல் கால் உடைந்து தான் கிடைக்க வேண்டும்.
வெளியில் பேசலாம் காவல் நிலையத்தில் உட்காரும் போது தான் தெரியும். ஜட்டியுடன் உட்கார வைத்து விடுவார்கள். இனிமேல் எந்த தப்பும் செய்ய மாட்டேன் என கெஞ்சும் அளவிற்கு நடந்து கொள்வார்கள். காவல் நிலையத்தில் போய் நான் ரவுடிதான் என சொல்லிபாருங்கள் தெரியும்.
ஒழுங்காக படித்து ஏதாவது நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வேலைக்கு செல்வதுதான் நல்லது. இதை விடுத்து விட்டு செயின் அறுப்பது, இன்ஸ்டா ரீல்ஸ் என்ற பெயரில் கத்தியை வைத்துக்கொண்டு வீடியோ வெளியிடுவது எல்லாம் கைகள் உடைக்கப்படும், கால்கள் உடைக்கப்படும்.
Varichur Selvam: இனி நகை எடுக்க வாய்ப்பில்லை
என்னை சுட்டுபடிக்க உத்தரவு என்ற இதுபோன்ற செய்திகளை உறுதி செய்து விட்டு போடுங்கள் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என்னிடம் ஆயுதத்திற்கு வேலையே கிடையாது. 15 நாளைக்கு ஒருமுறை என் வீட்டிற்கு வந்து முழுவதுமாக சோதனை செய்துவிட்டு போகிறார்கள்.
எனக்கு இதற்கு மேல் நகை எடுக்க விருப்பமில்லை. எனக்கு போதுமானது. இதற்கு மேல் நகை போட்டால் என்னால் பாதுகாக்க முடியாது. வரிச்சியூர் செல்வம் என்று அடையாளத்தோடு இருந்து விடுகிறேன். என்னை பார்த்து ஏராளமானோர் நகை அணியை தொடங்கிவிட்டார் என்றால் நகை கடைக்கு நல்ல வியாபாரம் நடப்பது மகிழ்ச்சி தான்" என்றார்.
மேலும் படிக்க | பாலியல் வழக்கு: சிக்கினார் மத போதகர் ஜான் ஜெபராஜ்... மடக்கி பிடித்த கோவை போலீசார்!
மேலும் படிக்க | குடும்ப தலைவி மட்டும் இல்லை! இனி இவர்களுக்கும் ரூ. 1000 உரிமை தொகை கிடைக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









