)
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. மாவட்ட ரீதியாக பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் உள்ள 11 வட்டங்களில் காலியாக உள்ள 155 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. அதன்படி, மதுரை தெற்கு, திருமங்கலம், உசிலம்பட்டி, மதுரை மேற்கு, பேரையூர், திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் காலியாக கிராம உதவியாளர் பணிக்கு மதுரை கிழக்கு பகுதியில் 35 இடங்களும், கள்ளிக்குடியில் 2 இடங்களும், மேலூரில் 23 இடங்களும், மதுரை வடக்கு பகுதியில் 15 இடங்களும், மதுரை தெற்கு 7 இடங்களும், திருமங்கலத்தில் 7 இடங்களும், உசிலம்பட்டியில் 8 இடங்களும், வாடிப்பட்டியில் 13 இடங்களும், மதுரை மேற்கு பகுதியில் 11 இடங்களும் என மொத்தமாக 155 இடங்கள் நிரப்பப்படுகிறது.
மேற்கண்ட பணியிடத்திற்கு குறைந்தபட்ச 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருப்பவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, பழங்குடி, பட்டியலின பிரிவினருக்கு 42 வயது வரையும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 39 வயது வரையும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது வரம்பில் தளர்வு உள்ளது.
கல்வித்தகுதியை பொறுத்தவரை, 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி, இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கிராமம் எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிக்கு சம்பளமாக ரூ. 11,100 முதல் ரூ.35,100 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம உதவியாளர் பணிக்கு மதுரை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை நிரப்பி உரிய முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரடியாகவோ வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் நகல் உள்ளிட்டவற்றை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்குள் தபால் மூலமாகவோ, நேரிலோ சென்று விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். நேர்காணல் மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
மேலும் படிக்க : TTDC: ஊட்டிக்கு 3 நாள் சுற்றுலா... மலையேற்றமும் செய்யலாம் - கட்டணம் எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ