மதுரவாயல் தொகுதி: திமுக வேட்பாளர் யார்? மூவர் இடையே கடும் போட்டி!

சென்னையில் முக்கியமான ஒரு சட்டமன்ற தொகுதியாக மதுரவாயில் உள்ளது. மிகப்பெரிய தொழில் வளம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி என அதிக பணம் புழங்கும் தொகுதி மதுரவாயில் என்பதால் இந்த தொகுதியின் மீது திமுக கூடுதல் கவனம் வைத்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 6, 2026, 09:17 PM IST
  • மதுரவாயல் சட்டமன்ற தொகுதி!
  • யாருக்கு சீட் கிடைக்கும்?
  • திமுக தலைமை முடிவு!
மதுரவாயல் தொகுதி: திமுக வேட்பாளர் யார்? மூவர் இடையே கடும் போட்டி!

2026 சட்டமன்ற தேர்தல் பரபரப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திமுகவின் கோட்டையாக கருதப்படும் சென்னை பகுதியில் யார் யாருக்கு சீட்டு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் முக்கிய சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுகவின் சார்பில் சென்னையில் யார் யார் போட்டியிடுவார்கள் என மக்களின் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சென்னையில் முக்கியமான ஒரு சட்டமன்ற தொகுதியாக மதுரவாயில் உள்ளது. மிகப்பெரிய தொழில் வளம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி என அதிக பணம் புழங்கும் தொகுதி மதுரவாயில் என்பதால் இந்த தொகுதியின் மீது திமுக கூடுதல் கவனம் வைத்துள்ளது. திமுக சார்பில் இந்த தொகுதியில் யாருக்கு சீட் கிடைக்கும் என்பதில் பெரும் போட்டி நிலவில் வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தற்போது இந்த தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருக்கும் காரப்பாக்கம் கணபதி மீண்டும் தனக்கு சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் திமுகவில் நீண்ட ஆண்டுகளாக இருந்து வரும் துரை வீரமணி இந்த தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இவர்களை தாண்டி மக்கள் நீதி மையத்திலிருந்து திமுகவில் இணைந்து பத்மப்ரியாவும் இந்த தொகுதியை தனக்கு கொடுக்குமாறு கேட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க: ஊழியர்களுக்கு குட் நியூஸ்! அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய தமிழக அரசு.. யாருக்கெல்லாம் தெரியுமா?

சிட்டி எம்எல்ஏ காரப்பாக்கம் கணபதி!

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அமைச்சர் பெஞ்சமினை முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றவர் காரப்பாக்கம் கணபதி. தற்போது தனக்கு மீண்டும் மதுரவாயில் தொகுதியை கேட்டு திமுக மேலிடத்தில் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்திருந்தார். மதுரவாயல் தொகுதியில் செய்த நலத்திட்டங்கள் மற்றும் மக்களிடையே அவருக்குள்ள வரவேற்பு ஆகியவற்றை தலைமைக்கு எடுத்துக் கூறி மீண்டும் இந்த தொகுதியில் சீட் கேட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் எளிதாக சீட் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

குறிவைக்கும் துரை வீரமணி!

திமுக சார்பில் மதுரவாயில் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார் அப்பகுதியின் ஒன்றிய செயலாளராக இருக்கும் துரை வீரமணி. இவர் இந்த முறை வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவரின் தந்தையான துரைவேலு ஒருங்கிணைந்த வில்லிவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் ஆக இரண்டு முறை இருந்துள்ளார். மேலும் கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு வீரமணி ஏற்பாட்டில் அந்த பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதனை சிறப்பாக நடத்தியதற்காக மு க ஸ்டாலின் நேரடியாக பாராட்டி இருந்தார். இந்த முறை அவருக்கு மதுரவாயல் தொகுதியில் நிச்சயம் சீட் கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். 

பத்மப்ரியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா?

இவர்களை தவிர இந்த தொகுதியில் தனக்கு எம்எல்ஏ சீட் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யதிலிருந்து திமுகவில் இணைந்த பத்மபிரியா தலைமையிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் மதுரவாயில் தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டார் பத்மபிரியா. இந்நிலையில் இந்த முறை தனக்கு சீட்டு கொடுக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

யாருக்கு சாதகம்?

மதுரவாயல் தொகுதியை பொறுத்தவரை படித்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஐடி ஊழியர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியாகும். எனவே தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை நன்கு அறிந்த ஒருவருக்கு சீட் வழங்க திமுக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மும்முனை போட்டியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் யாருக்கு மதுரவாயல் தொகுதியை ஒதுக்க போகிறார் என்பது திமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க:  வெளுக்கப்போகும் மழை.. இந்த 2 மாவட்டங்கள் உஷார்! வானிலை அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News