)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் இன்று முதல் தமிழகம் முழுவதும் வீடு வீடாக விநியோகம் செய்ய உள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ரேசன் கார்டு வைத்துள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 1 கோடியே 14 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். இருப்பினும் சிலரால் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் மீண்டும் மகளிர் உரிமைத்தொகைக்காண விண்ணப்பம் பெறப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த திட்டத்தில் யார் யார் பயன் பெறுவார்கள் என்பதற்கான விதிகளிலும் சில திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி புதிதாக இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அனைத்து பெண்களுக்கும் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஆயிரம் ரூபாய் மகளிர் உதவி தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக சிறப்பு முகாம்களும் ஏற்பாடு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம்!
அதன்படி இன்று முதல் மகளிர் உரிமைத்தொகைக்காண விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் என்ற தமிழக அரசின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது. அடுத்த மூன்று மாதங்கள் இந்த பணியை தொடரும் என்றும் சுமார் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் இந்த திட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
முன்பு மகளிர் உரிமைத் தொகையில் சிலருக்கு ஊக்கத்தொகை கிடைக்காமல் இருந்தது. அதில் சில மாற்றங்களையும் செய்து அவர்களுக்கும் உதவி தொகை கிடைக்கும் வகையில் தமிழக அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. வீட்டில் நான்கு சக்கர வாகனம் இருந்தால் முன்பு உரிமைத்தொகை வழங்கப்படாமல் இருந்தது, ஆனால் தற்போது அவர்களுக்கும் சில தகுதிகள் அடிப்படையில் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. ஆதரவற்ற விதவைகளுக்கும், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். இவர்களது விண்ணப்பங்கள் முழுவதும் சரிபார்க்கப்பட்டு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ