சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், "நடைபெறும் மக்கள் விரோத ஸ்டாலின் அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதை திசை திருப்ப முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கட்டுக்கதைகளை, கட்டுரைகளை அவிழ்த்து விடுகிறார் அதை மக்கள் நம்ப தயாராக இல்லை. இன்றைக்கு தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் மண் காப்பாற்ற ஒன்றிணைவோம் என்று கூறியுள்ளார்கள், மக்கள் இதை நம்ப தயாராக இல்லை. தமிழகத்தில் மானம் பறிபோய் இருக்கிறது திமுக அரசிலே, தமிழகத்தின் மண்ணைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் ஸ்டாலினுக்கு ஆட்சி அதிகாரம் எதற்கு? என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். கடந்த நான்கரை ஆண்டு காலம் எடப்பாடியார் ஒரு சிறப்பான ஆட்சியை செய்தார். ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை பெற்று தந்தார், எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கினார்.
2000 அம்மா மினி கிளினிக், குடிமராமத்து திட்டம், அன்றைக்கு மாரியம்மன் தெப்பக்குளத்தில் கிரிக்கெட் மைதானமாக இருந்தது அதை இன்றைக்கு தண்ணீர் நிறைந்த தெப்பமாக மாற்றிக் காட்டியது எடப்பாடியார் தான். கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு திமுக மதுரையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார்கள், இந்த முத்தமிழ் வளர்த்த மதுரைக்கு என்ன சிறப்பு திட்டத்தை கொண்டு வந்தார் ஸ்டாலின். இதே எடப்பாடியார் மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி அதில் 1,200 கோடி மதிப்பில் லோயர் கேம்பில் இருந்து குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார். அதை யாரும் மறக்க முடியாது, வைகை நதியை பாதுகாத்தார், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் வைகை நதி கரையில் சாலை அமைத்து கொடுத்தார்.
இன்றைக்கு உங்கள் அரசின் மீது மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளார்கள். 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திமுகவை கரைசேர்க்க போகிறது என்று நினைக்கிறீர்கள். அந்தத் திட்டம் தான் திமுகவில் மூழ்கடிக்க போகிறது என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம். ஆட்சிக்கு வரும் முன் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகையை வழங்குவோம் என்று சொல்லிவிட்டு, அதனை தொடர்ந்து சில நிபந்தனை விதித்தார்கள், தற்போது ஆட்சி முடியும் தருவாயில் சில நிபந்தங்களை தளத்தினீர்கள் அப்படி என்றால் உங்கள் உண்மை நோக்கம் என்ன? எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சும், ஆளும் கட்சி இருக்கும் பொழுது ஒரு பேச்சு என்று முன்னுக்கும், பின்னும் முரணாக உள்ளது என்று அரசு ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள் என அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள்?
இன்றைக்கு ஸ்டாலின் ஆட்சி அதிகாரம் மக்கள் சேவைக்காகவா? அல்லது மக்களை ஏமாற்ற நாடகமா? என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள் இதற்கு விடையாக எடப்பாடியார் ஜூன் ஏழாம் தேதி தமிழ் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று சுற்றுப்பயணம் செய்கிறார். இதன் மூலம் குடும்ப வாரிசு, சர்வாதிகாரம், அவலஆட்சியை ஆகிய பிடியில் இருந்து மீட்பார், எடப்பாடியார் புரட்சி பயணம் வெற்றி பயணமாக வாகை சூடும் ,மக்கள் மனதில் நம் வீட்டு பிள்ளை என்ற வரவேற்க தயாராகி விட்டார்கள், அதேபோல மதுரை மண்ணுக்கு வருகை தரும் போது நாம் மகத்தான வரவேற்பு தருவோம். எடப்பாடியார் பயணம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் வகையில் அமையும் என கூறினார்.
திமுகவுடன் உண்மை தன்மை இல்லை மக்களை ஏமாற்றுகிறது தான். எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு பேச்சும் ஆளுங்கட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு இன்று முரண்பாடு ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறாரா அல்லது மக்களுக்கு சேவை செய்கிறாரா என்று தமிழக முழுவதும் கேள்வி எழுந்துள்ளது. இன்றைக்கு எடப்பாடி யார் ஜூலை ஏழு முதல் மக்களை சந்திக்க இந்த அவல ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புரட்சி பயணத்தை தொடங்கியுள்ளார். மக்களெல்லாம் மலர் தூவி நம் வீட்டுப்பிள்ளை என வரவேற்க தயாராகி விட்டார்கள் இந்த வெற்றி வரலாறு குறிக்கப்பட்டு ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் என கூறினார்.
மேலும் படிக்க | இளைஞர்கள் கவனத்திற்கு... தமிழ்நாடு அரசின் இலவச வேலைவாய்ப்பு முகாம் - உடனே பாருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









