Mahavishnu: தமிழ்நாட்டில் பரம்பொருள் அறக்கட்டளையை நிறுவி பல்வேறு ஆன்மீகப் பணிகள் மற்றும் சமூகப்பணிகளை செய்து வருபவர் மஹாவிஷ்ணு. இவர் உலகின் பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு ஆன்மீகப் பயிற்சி அளிப்பதோடு ஆன்மீக உரைகளும் ஆற்றி வருகிறார்.
Mahavishnu: பொருளுக்கும் அருளுக்கும் இடையிலான தேடல்
அந்த வகையில் தற்போது மொரிஷியஸ் ச்செபல் பகுதி தேவி பராசக்தி ஆலயத்திற்கு சென்று அங்கு நடந்த யோகா மற்றும் வாழ்வியல் சத்சங்கத்தில் பக்தர்கள் முன்பு சொற்பொழிவாற்றினார். திருமூலரின் திருமந்திரத்தோடு மஹாவிஷ்ணு அவரது உரையை தொடங்கி உள்ளார். 'எங்கே நாம் போகிறோம்?' என்ற தலைப்பில் பல முக்கிய கருத்துகளை பேசி உள்ளார்.
அதில் அவர், "பொருளுக்கும் அருளுக்கும் இடையிலான தேடலில் மக்கள் பொருளை மட்டுமே தேடி ஓடுவதால் வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளும் உருவாகின்றன. பிறப்பு தொடங்கி இறப்பு வரையிலான இந்த வாழ்க்கை சுழற்சியில் முக்கியமான ஒரு சூத்திரத்தை மறந்துவிட்டால் நாம் மீண்டும் இந்த பிறப்பு சுழற்சிக்குள் சிக்கிக்கொள்வோம்" என்று பேசி உள்ளார்.
மேலும் படிக்க | கேஸ் கசிவு - பற்றி எரிந்த வீடு, பதற வைத்த விபத்துக்கான காரணம்
Mahavishnu: 'என்னை குரு என்று சொன்ன மாட்டேன்'
மேலும் தொடர்ந்து பேசிய அவர்,"நாளை என்ற ஒன்றை உணர முடியாத இந்த வாழ்வில் அறியாமை இருளில் இருந்து நம்மை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவரே குருவாக இருக்க முடியும். அதனால் என்னை குரு என்று கூறிக்கொள்ளமாட்டேன். ஒரு வழிகாட்டியாக மட்டுமே உங்கள் முன் எடுத்துரைக்கிறேன்" என தெரிவித்தார்.
தர்மத்தின் வழியில் நாம் எப்படி வாழ்வை தொடரவேண்டும் என்பது குறித்து பல ஆழமான கருத்துகளைப் மஹாவிஷ்ணு பகிர்ந்துகொண்டார். "தர்மம் என்பது மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது. நமது நோக்கங்கள் எண்ணங்கள் செயல்கள் ஆகியவற்றை பிரபஞ்சத்தின் தெய்வீக ஒழுங்கமைவுடன் ஒருங்கிணைக்கும் இருப்பாக அது அமைகிறது" என எடுத்துக்கூறியுள்ளார்.
Mahavishnu: அரபியில் திருக்குரான் வசனம் பேசிய மஹாவிஷ்ணு
மஹாவிஷ்ணு இந்து மக்களுக்காகவும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆளும் பாஜக கட்சி சார்ந்து செயல்படுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்தில் இவர் அரபிக் மொழியில் திருக்குரான் வசனம் பேசி மத நல்லிக்கணத்தை பேணும் வகையில் மனிதநேயத்தை வலியுறுத்தியது பெரும் பேசு பொருளா மாறியது. மக்களிடம் இதனால் அவருக்கு பாராட்டும் கிடைத்தது. மதுரை ஆதீனமும் திருக்குரான் வசனம் பேசி பிரபலமாகியிருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.
Mahavishnu: தெளிவான பதில்...!
"பிரபஞ்சத்தின் தெய்வீக உயர் நிலைக்கு முன் உண்மையாக சரணடையும் போது வாழ்வில் நிறைவு கிடைப்பதோடு வெற்றிகள் எளிதாகக் கைக்கூடும்" என்கிறார் மஹாவிஷ்ணு. விதி, கர்மா, முக்தி குறித்த பல கேள்விகளுக்கும் தெளிவாகப் பதில் அளித்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் மொரிஷியஸ் பராசக்தி ஆலயத்தின் குருக்கள் உமாபதி, மஹாவிஷ்ணுவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். அங்கிருக்கும் முக்கியமான ஆன்மீகத்தலைவர்களையும் மஹாவிஷ்ணு அவர்கள் சந்தித்து பேசினார்.
மேலும் படிக்க | தமிழக அரசுக்கே ஐடியா கொடுக்கலாம்! - பட்ஜெட் குறித்து கருத்து சொல்ல இதை பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









