சென்னை தி.நகர் குடியிருப்பில் தீ விபத்து!!

சென்னை தி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Updated: Dec 3, 2019, 11:46 AM IST
சென்னை தி.நகர் குடியிருப்பில் தீ விபத்து!!

சென்னை தி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று காலை ஏற்பட்டது. இதை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டுள்ள தனியார் நிறுவன அலுவலகம் சேகர் ரெட்டிக்கு சொந்தமானது என தகவல் வெளியாகி உள்ளது.