நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2ஏ முதன்மை தேர்வு.. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ரொம்ப முக்கியம்!

TNPSC Group 2 Exam On March 15th: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குருப் 2ஏ தேர்வு நாளை (மார்ச் 15) நடைபெற உள்ள நிலையில், முக்கிய அறிவிப்பை வெளியாகி உள்ளது.   

Written by - Umabarkavi K | Last Updated : Mar 14, 2026, 08:28 PM IST
  • நாளை குரூப் 2,2ஏ முதன்மை தேர்வு
  • திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  • மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் நேரம்
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2ஏ முதன்மை தேர்வு.. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ரொம்ப முக்கியம்!

TNPSC Group 2 Exam On March 15th Latest: தமிழக அரசின் பெரும்பாலான துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் குரூப் 1, குரூப் 2,2ஏ, குரூப் 4 தேர்வுகளை தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில், பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார். அந்த வகையில், நாளை (மார்ச் 15) குரூப் 2,2ஏ தேர்வு நடைபெற உள்ளது. இதனையொட்டி, முக்கிய அறிவிப்பை திருவள்ளூர் ஆட்சியர் வெளியிட்டுள்ளார். 

Add Zee News as a Preferred Source

TNPSC: குரூப் 2 தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு

இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 மற்றும் தொகுதி 2ஏ பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு எதிர்வரும் மார்ச் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் வட்டத்தில் உள்ள ஸ்ரீநிகேதன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முற்பகல் 120 தேர்வர்களும், பிற்பகல் 124 தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். 

மேலும், தேர்வில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதியும், பார்வையற்றோர் தேர்வு எழுதிட, மாற்றுநபர் மற்றும் தனி அறைகள் கொண்ட வசதியும் தேர்வுக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கூடத்தில் தனித்தனியாக காவலர் பாதுகாப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தேர்வுகள் சிறப்பாக நடைபெற ஒரு தலைமை கண்காணிப்பாளர், ஒரு இயக்கக் குழு அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பறக்கும் படை குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி தேர்வில் பங்கு பெறும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு எளிதில் சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் (விழுப்புரம்) லிமிடெட், திருவள்ளூர் மண்டலம் மூலமாக போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி, முற்பகல் தேர்வு எழுத வரும் தேர்வர்கள் சரியாக காலை 8.30 மணிக்குள்ளும் மற்றும் பிற்பகல் தேர்வு எழுத வரும் தேர்வர்கள் சரியாக 1.30 மணிக்குள்ளும் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும். மேலும் காலை 9.00 மணி மற்றும் பிற்பகல் 2.00 மணிக்குள் தேர்வு கூடத்திற்கு வராதவர்கள் தேர்வாணைய அலுவலர்களால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு நேரம் முடிந்தும் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்  என்று திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

TNPSC: நாளை குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு

நாளை (மார்ச் 15) குரூப் 2,2ஏ முதன்மை தேர்வு நடைபெறுகிறது.  உதவி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், உதவியாளர், இளநிலை கண்காணிப்பாளர், வனவர், கணக்கு ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 2, 2ஏ  பதவிளுக்கு 829ஆக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான முதல்நிலை தேர்வு  2025 செப்டம்பர் 28ஆம் தேதி நடந்த நிலையில், இதற்கான முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியானது.  

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மை  தர்வு பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அன்றைய தினமும் தேர்வு நடந்தது. ஆனால்,  சென்னையில் தேர்வு மையம் தொடர்பாக குளறுபடி ஏற்பட்டதை அடுத்து, குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, மார்ச் 15ஆம் தேதி குரூப் 2,2ஏ மறுதேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.  மார்ச் 15ஆம் தேதி காலையில் தாள் ஒன்று தமிழ் மொழித் தகுதித் தேர்வு, தாள் இரண்டு பொது அறிவு, பொது நுண்ணறிவு, பகுத்தறிவு ஆகிய தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை (மார்ச் 15) ரத்தான குரூப் 2,2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: ஒரு வாரத்திற்கு மழை வெளுக்கும்.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்

மேலும் படிக்க:  LPG தட்டுபாடு: மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம்... ஹோட்டல்களுக்கு ஜாக்பாட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News